ஆனந்த விகடன் வரவேற்பறையில் கல்விச்சோலை பக்கம்..


தமிழின் முன்னணி வார இதழான ஆனந்த விகடனில் வாரம் ஒரு பயனுள்ள இணையதளத்தை வரவேற்பறை பகுதியில் அறிமுகப் படுத்துவார்கள். ஒவ்வொரு முறையும் விகடனைப் படிக்கும் போது என்னுடைய  இணையதளம்  வந்தால் எப்படி இருக்கும் என நினைத்துப்பார்த்திருக்கிறேன் ஏனெனில் ஆனந்த விகடனின் அங்கீகாரம் உலகம் முழுவதும் சென்றடையக் கூடியது. 


அதிசயமாக இந்த வாரம் 21.12.2011 ஆனந்த விகடன் இதழில் என்னுடைய இணையதளத்தை குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனந்த விகடனுக்கு இதய பூர்வமான நன்றிகள். கல்விச்சோலையை ஆனந்த விகடனுக்கு அறிமுகப்படுத்திய நண்பர் விழுப்புரம் ஆசிரியர் ராஜ்குமார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்

எதையும் எதிர்பார்க்காமலும் வருமானமின்றியும் நேரத்தைச் செலவு செய்தல் என்பது சில நேரம் மனதிற்குள் சஞ்சலங்களை ஏற்ப்படுத்தும் இருந்தாலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறியாத பல செய்திகளை அறியத்தந்தால் அது அவர்களுக்கு சிறிதளவேனும் பயன்படும் என்ற எண்ணத்திலேயே தகவல்களை பதிவிடுகிறேன்.

1000 க்கு மேற்பட்ட பதிவுகள், 15100 க்கு மேற்பட்ட மின்னஞ்சல் வாசகர்கள், 23000 க்கு மேற்பட்ட குறுஞ்செய்தி சந்தாதாரர்கள் ,   26 லட்சம் பார்வைகள் ,  650 க்கு மேற்பட்ட பேஸ் புக் பின் தொடரும் நண்பர்கள் ,  307 க்கு மேற்பட்ட ட்விட்டர்  பின் தொடரும் நண்பர்கள் , என குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன் தற்போது விகடனின் பாராட்டும் என்னை மேலும் உத்வேகத்துடன் செயல்பட காரணமாக இருக்கின்றன.


எனது தகவல்களுக்கு கருத்து மற்றும் பாராட்டு தெரிவிக்கும் முகம் தெரியா நண்பர்கள் அனைவருக்கும்  என் இதயங்கனிந்த நன்றிகள். உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி. உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் 


No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||