பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் ஜூலை 13-ந் தேதி தொடங்குகிறது.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல்-பதவி உயர்வு கவுன்சிலிங் அடுத்த மாதம் (ஜுலை) 13-ந் தேதி தொடங்கி, 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்குனர் பி.மணி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல், இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான உத்தேச கால அட்டவணை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

பணிநிரவல் கவுன்சிலிங்
1. ஜுலை 13 மற்றும் 14-ந் தேதி (வெள்ளிசனி) - மாவட்டத்திற்குள் பணிநிரவல் (அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும்)
2. 16 மற்றும் 17-ந் தேதி (திங்கள்செவ்வாய்) - மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல்
இடமாறுதல் கவுன்சிலிங்
3. 23-ந் தேதி (திங்கள்) - இடமாறுதல் கவுன்சிலிங் (அதே மாவட்டம்- அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)
4. 24-ந் தேதி (செவ்வாய்) - இடமாறுதல் கவுன்சிலிங் (வெவ்வேறு மாவட்டம்-அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)
5. 27-ந் தேதி (வெள்ளி) - ஆசிரியர் பயிற்றுனர் பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல்
பதவி உயர்வு கவுன்சிலிங்
6. 30-ந் தேதி (திங்கள்) - பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) - ஆங்கிலம்கணிதம்அறிவியல்சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள்