தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஜுலை 21-ந் தேதி தொடங்கி, 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.


தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஜுலை  21-ந் தேதி தொடங்கி, 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பணி நிரவல் மற்றும் மாறுதல் கவுன்சிலிங் அட்டவணை
1. ஜுலை 21-ந் தேதி - காலை - பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் - ஒன்றியத்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம்; பிற்பகல் - பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் - ஒன்றியம் விட்டு ஒன்றியம்.
2. ஜுலை 22-ந் தேதி - பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும் மாறுதல் - மாவட்டம் விட்டு மாவட்டம்.

பணி நிரவல் மற்றும் மாறுதல் இடைநிலை ஆசிரியர்கள் கவுன்சிலிங் அட்டவணை
1. ஜுலை  28-ந் தேதி - இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் மற்றும் மாறுதல் – ஒன்றியத்திற்குள்.
2. ஜுலை  29-ந் தேதி - இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும் மாறுதல் - ஒன்றியம் விட்டு ஒன்றியம்.
3. ஜுலை  31-ந் தேதி - இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும் மாறுதல் - மாவட்டம் விட்டு மாவட்டம்