செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் பயிற்சி கூட்டம் நடைபெற்றது .

பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் பயிற்சியில் கலந்துக்கொண்ட விழுப்புரம் RMSA-ADPC திரு .அரங்கநாதன் அவர்களுக்கு மொடையூர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு சு.ஏழுமலை அவர்கள் பொன்னாடை போர்த்துகிறார்.அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் மூலம் வல்லம் ஒன்றிய பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

மொடையூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.ஏழுமலை தலைமையேற்று ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர் எல்.அரங்கநாதன் பயிற்சியைத் தொடங்கி வைத்தார். கோலியனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராணி கருத்தாளராகச் செயல்பட்டார்.

வல்லம் ஒன்றியத்தில் உள்ள 11 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 55 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். திட்டத்தின் குறிக்கோள்களை பள்ளியில் செயல்படுத்துவது குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

மொடையூர் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் எஸ்.கதிர்வேல் நன்றி கூறினார். 


No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||