ஆசிரியர் தகுதித்தேர்வு(TET) -- அறிந்ததும் அறியாததும்

DEVADOSS KK TRB  -ஆசிரியர் தகுதித்தேர்வினை (TET) இரண்டு முறை நடத்தியும் இன்னும் தேர்வெழுதுபவர்களுக்கு இத்தேர்வு பற்றிய முழுமையான விழிப்புணர்வோ புரிதலோ இல்லை.  அக்குறையை முடிந்தவரை நீக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
             TET தேர்வு என்பது அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமைச்சட்டம் 2009 ன் படி அறிமுகப் படுத்தப்பட்டது. மத்தியிலும் (CTET) வேறு சில மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தபப்பட்ட பிறகே தமிழகத்தில் TET தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. தகுதியும் திறமையும் வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
            முதல் TET தேர்வு அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி வினாக்கள் மிகத் தரமானதாகவும் 90 நிமிடங்களில் பதிலளிக்க முடியாததாகவும் இருந்ததால் அனைவருக்கும் அதிர்ச்சியே மிஞ்சியது. மிகக்குறைந்த அளவே வெற்றி பெற்றனர்.
             இரண்டாவது தேர்வில் வினாக்களின் தரம் ஓரளவு தெரிந்திருந்ததாலும் நேரம் அதிகரிக்கப்பட்டதாலும் ஓரளவு தேர்ச்சி விகிதம் இருந்தது.
             வினாக்கள் கடினமாக இருக்கிறது என்று புலம்புவதை விட அந்த தரத்தில் உங்களுடைய தயாரிப்பு முறைகள் மற்றும் பயிற்சி முறைகள் இருக்கவேண்டும். கேள்வி பதில்களை  மனப்பாடம் செய்து மட்டும் வெற்றி பெற முடியாது. பாடங்களை புரிந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் பல கடினமான கேள்விகளை புரிந்து கொண்டு விடையளிக்க முடியும்.
             மேலும்  SET, NET    தேர்வு போல  இத்தேர்வும் ஒரு தகுதித்தேர்வு தான்.  இதில் வெற்றிபெற்றால் நிச்சயம் பணி கிடைக்கும் என்று நினைக்கக்கூடாது. அதன்பிறகு தங்களுடைய 10,12ம் வகுப்பு, பட்டபடிப்பு, D.T.Ed., (or) B.Ed.,  ஆகியவற்றில் உங்களது மதிப்பெண் மற்றும் TET தேர்வில் நீங்கள் பெறும் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் கிடைக்கும் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலேயே பணிக்கு தேர்வு செய்யப்படுவீர்கள்.
        இதற்கு முன் நடந்த இரண்டு தேர்வுகளில் வெற்றி பெற்றோரின் எண்ணிக்கை தேவையானதை விட குறைவு. எனவே அனைவருக்கும் பணி கிடைத்தது. ஆனால் இனிவரும் தேர்வுகளில் தேவையை விட வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.  அந்நிலையில் அதிக கட்ஆப் மதிப்பெண் வைத்திருப்போர்களுக்கு மட்டும் பணி கிடைக்கும். எந்த பாடத்திற்கு எவ்வளவு ஆசிரியர்கள் தேவையென அறிவிக்கப்படுகிறதோ,அவ்வளவு ஆசிரியர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவர்.
    குறிப்பாக கம்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடங்களில், வெற்றிபெற்றாலும் அப்பாடத்தில் காலிபணியிடங்கள் அறிவிக்கப்படும் போதுதான் பணி கிடைக்கும்.
    தேர்வில் வெற்றிபெற்றால் உடனே வேலை உறுதி என்று எண்ணி, பிறகு மனம் உடையக்கூடாது என்பதற்காகவே இந்த தகவல். தேர்வில் வெற்றிபெற்றும் கட்ஆப் மதிப்பெண் குறைவாக பெற்றதால் வேலை கிடைக்காதவர்கள் அடுத்தமுறை மீண்டும் தேர்வெழுதி தங்களுடைய மதிப்பெண்களை அதிகரித்துக்கொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வெழுதி மதிப்பெண்களை அதிகரித்துக்கொள்ளலாம். முடிந்தவரையில் TET தேர்வில் அதிக மதிப்பெண்கள் (அதாவது 135) பெற்றுவிட்டால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.(அதாவது கட்ஆப் மதிப்பெண்களை அதிகரித்துக்கொள்ளலாம்).

       உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி என்னவென்றால்,இத்தேர்வில் வெற்றிபெற்றால் அரசுப்பள்ளிக்கு மட்டுமின்றி  அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் அரசு ஊதியத்துடன் பணி கிடைக்கும். தனியார் பள்ளிகளிலும் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தற்போது TET தேர்வில் வெற்றிபெற்றோருக்கான தேவை அதிகமாகவே உள்ளது என்பதை மனதில் கொண்டு தேர்வுக்கு மனஉறுதியுடன் தயார்செய்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
     தற்போது B.Ed, (or) DT.Ed, 2 ம் ஆண்டு படித்துக்கொண்டிருப்போரும் இப்போதிருந்தே தேர்வுக்கு தயாராகலாம்.   
          இத்தேர்வைப்பற்றிய முறையான பார்வை,  சரியான வியூகம்,கடின உழைப்பு ஆகியவை இருந்தால் இத்தேர்வில் வெற்றிபெறுவது என்பது ஒன்றும் சவாலான செயல் அல்ல. அனைவரும் தேர்வில் வெற்றிபெற எமது நிறுவனம் சார்பிலும் கல்விச்சோலை சார்பிலும் வாழ்த்துகிறோம்.                                                                        
நன்றி : 
பாரதி கல்வி மையம்.

(BHARATHI  STUDY CENTRE)

(98942 74672 ; 86820 84318)
                                                  
 




Kalvisolai Restricted Holidays - 2013 | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை - 2013 | R.H 2013 | R.L 2013

வரையறுக்கப்பட்ட விடுமுறை - 2014 (R.H-2014)


......................................................



வரையறுக்கப்பட்ட விடுமுறை - 2013 (R.H-2013)

'மரம்' கருணாநிதி

இதுவரை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டும், இன்னும் மரங்கள் நட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ள கருணாநிதி:விழுப்புரம் மாவட்டம், சங்கீதமங்கலம் கிராமம் தான், என் சொந்த ஊர். கடலூர் அரசுப் போக்குவரத் துக் கழகத்தில், ஓட்டுனராக உள்ளேன். மாதம், 22 ஆயிரம் ரூபாய் சம்பளம்; பிடித்தம் போக, 17 ஆயிரம் ரூபாய் வரும். அதில், 10 ஆயிரம் ரூபாயை மரங்களுக் காகவே செலவு செய்கிறேன். நான் பத்தாம் வகுப்பு வரை தான் படித்தேன்; மேற்கொண்டு படிக்க ஆர்வமில்லை. காடு, மேடெல்லாம் சுற்றித் திரிவேன். எங்கு விதை கிடைத் தாலும், அதை எடுத்து, முளைக்க வைத்து, யாரிடமாவது கொடுப்பேன். 

நர்சரி போட்டு, அதில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து கொடுக்கும் அளவிற்கு, நிலமோ, வசதியோ என்னிடம் இல்லை. என் சம்பளப் பணத்தில் இருந்து, மரக்கன்றுகளை வாங்கி, மக்களுக்குக் கொடுப்பேன். ஆரம்பத்தில் என் கிராமத்திற்கு மட்டும் தான், இதை செய்தேன். இப்போது, தமிழகத்தில், எங்கு அழைத்தாலும், மரக்கன்றுகள் வழங்குகிறேன். திருமணத்திற்கு தாம்பூலப் பைக்கு பதிலாக, மரக்கன்று கொடுக்கும் பழக்கத்தை, பல ஆண்டுகளுக்கு முன், நான் ஆரம்பித்து வைத்தேன். 

விழுப்புரம் மாவட்டத்தில், எனக்குத் தெரிந்து, யாருக்குப் பெண் குழந்தை பிறந்தாலும், உடனே, ஒரு சந்தன மரக்கன்று கொடுப்பேன். சந்தன மரம் வளர்ந்து வர, 25 ஆண்டுகள் ஆகும். அந்த பெண் குழந்தைக்குத் திருமணம் ஆகும் போது, அந்த மரம், திருமணச் செலவிற்கு உதவியாக இருக்கும். எனக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்காக நான் எதையும் சேர்த்து வைக்கவில்லை; ஆளுக்கு, இரண்டு சந்தன மரம் நட்டிருக்கிறேன்; அது போதும். 

ஊருக்குள் என்னை, கோமாளி போல பார்க்கின்றனர். என் காதுபடவே, கிண்டல் செய்கின்றனர். ஆனால், எதைப் பற்றியும் எனக்குக் கவலை இல்லை. காரணம், இந்த மரம் என் அடையாளத்தையே மாற்றியுள்ளது. "மரம்' கருணாநிதி என அழைக் கும்படியும் செய்துள்ளது.