பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 2 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் உள்ளன. இதில் 100 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் முழுத்தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளையும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் 1,117 பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. அதாவது, அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மட்டும் 900-க்கும் அதிகமான பள்ளிகள் முழுத் தேர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளன.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வில் மொத்தம் 88.1 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சிப் பெற்றனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வை பள்ளிகளின் மூலமாக 7 லட்சத்து 99 ஆயிரத்து 513 மாணவர்கள் எழுதினர். இதில் 7 லட்சத்து 4 ஆயிரத்து 125 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெறாதவர்களின் எண்ணிக்கை 95,388 ஆகும்.

இந்தத் தேர்வு முடிவுகள் தொடர்பான ஆய்வறிக்கை பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதன் விவரம்: பிளஸ் 2 தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதவர்களின் எண்ணிக்கை 42 சதவீதம் ஆகும். இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களின் எண்ணிக்கை 32 சதவீதமாக உள்ளது. மீதமுள்ள மாணவர்கள் இரண்டுக்கும் அதிகமான பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.

2011-ஆம் ஆண்டில் 35 அரசுப் பள்ளிகளில் மட்டுமே 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 100 அரசுப் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி உள்ளது. அதேபோல், அனைத்து வகைப் பள்ளிகளிலும் கடந்த ஆண்டு 892 பள்ளிகள் மட்டுமே முழுத்தேர்ச்சி விகிதம் இருந்தது. இப்போது இது 1,117 ஆக அதிகரித்துள்ளது. சென்னை, கோவை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, விழுப்புரம், திருச்சி, தருமபுரி, தூத்துக்குடி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||