2013 – 2014-ஆம் கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள SSLC பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் அனைத்து தனித் தேர்வர்களும் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் பெயர்களை பதிவுச் செய்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

2013 – 2014-ஆம்  கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள SSLC பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் அனைத்து  தனித் தேர்வர்களும் (முதன் முறையாக  அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) / ஏற்கனவே தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்று, அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு பெயர் பதிவு செய்திராத தனித்தேர்வர்களும் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் பெயர்களை பதிவுச் செய்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது. 

அனைத்து  தனித்தேர்வர்களும் 2013 ஜூன் 3 முதல் 30-ஆம் தேதி முடிய சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று செய்முறை வகுப்புகளில் கலந்து கொண்டு 80%  பயிற்சி வகுப்பிற்கு வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளாத தேர்வர்களின் விண்ணப்பம் 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள இடைநிலைப் பள்ளி விடுப்புச்  சான்றிதழ் பொதுத் தேர்விற்கு ஏற்க இயலாமல் நிராகரிக்கப்படும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளுமாறு தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான விண்ணப்பப் படிவத்தினை  www.dge.tn.nic.in    என்ற இணையதளத்தில் 03.06.2013 முதல் 30.06.2013 வரை பதிவிறக்கம் செய்து, விபரங்களை இரண்டு நகல்களில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களிடம் தனித்தேர்வர்கள் 30.06.2013க்குள் நேரில் ஒப்படைத்தல் வேண்டும்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||