அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு பெற விரும்புவோர் விண்ணப்பங்களை 5.6.2013 மாலை 5.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகங்களிலும் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளில் 25%    இட ஒதுக்கீடு அறிமுக வகுப்புகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இவ்விடங்கள் பல பள்ளிகளில் பூர்த்தி அடையாத நிலையில் உள்ளது. இத்தகைய பள்ளிகளில் விண்ணப்பம் செய்ய விரும்புவோருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க விரும்பினால் இதற்கென உரிய விண்ணப்பத்தில் தக்க சான்றுகளுடன் முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் இவ்விரு அலுவலகங்களிலும் 31.5.2013 முதல் 5.6.2013 வரை இலவசமாக வழங்கப்படுகின்றன. பெற்றோர்கள் இவ்விண்ணப்பங்களை பெற்று உரிய சான்றுகளுடன் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்படுகிறது. இவ்வொக்கீட்டிற்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினர்கள் எஸ்ஸி / எஸ்.டி / பி.சி. / எம்.பிசி மற்றும் ஆதாரவற்றோர் , எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டோரின் பிள்ளைகள் / சுகாதாரமற்ற பணி செய்வோரின் பிள்ளைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் மற்றும் வருட வருமானம் ரூ.2,00,000-க்கு குறைவானோர் உரிய சான்றுகளுடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்தால் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கு ஏற்ப சேர்க்கை பெற்று வழங்கப்படும். இவ்வொதுக்கீடு சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 5.6.2013 மாலை 5.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகங்களிலும் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||