கணித பட்டதாரி ஆசிரியர், உதவி என்ஜினீயர் தேர்வு முடிவு வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.சோபனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– 16.12.2012 அன்று நடைபெற்ற சமூக நலத்துறையில் பட்டதாரி ஆசிரியர்(கணிதம்) பதவிக்கான 3 காலிப்பணியிடத்திற்கான எழுத்து தேர்வின் அடிப்படையில் நேர்முக தேர்விற்கு தெரிவு செய்யப்பட்ட 9 விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நேர்காணல் குறித்த விவரங்கள் தேர்வாணைய வலைதளம் மற்றும் அழைப்பாணை மூலம் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும். 16.12.2012 அன்று நடைபெற்ற தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மாநில பணிமனையில் உதவி பொறியாளர்(தானியங்கி) பதவிக்கான 1 காலிப் பணியிடத்திற்கான எழுத்து தேர்வின் அடிப்படையில் நேர்முக தேர்விற்கு தெரிவு செய்யப்பட்ட 3 விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நேர்காணல் குறித்த விவரங்கள் தேர்வாணைய வலைதளம் மற்றும் அழைப்பாணை மூலம் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments