நர்சிங், பார்மசி, பிசியோதெரபி உள்ளிட்ட துணைநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் வழங்கப்படும் என்று மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் தெரிவித்தார்.

நர்சிங், பார்மசி, பிசியோதெரபி உள்ளிட்ட துணைநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் வழங்கப்படும் என்று மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் தெரிவித்தார்.

தொழிற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்து விட்ட நிலையிலும், கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையிலும் மாணவ–மாணவிகள் குறிப்பாக, மாணவிகள் பெரிதும் விரும்பும் நர்சிங் படிப்புக்கான விண்ணப்பங்கள் மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை. விண்ணப்பம் எப்போது வழங்கப்படும்? என்பதும் அறிவிக்கப்படவில்லை.இதுகுறித்து மாநில மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனரும், மருத்துவ தேர்வுக்குழுவின் செயலாளருமான டாக்டர் சுகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, செங்கல்பட்டு, சேலம் ஆகிய 4 இடங்களில் அரசு நர்சிங் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 50 சதவீதம் மொத்தம் 200 பி.எஸ்சி. (நர்சிங்) இடங்கள் இருக்கின்றன. இவை தவிர, 145 தனியார் நர்சிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 5,087 இடங்கள் கிடைக்கும்.கூடுதல் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைக்க வாய்ப்பு இருப்பதால் இந்த இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பிசியோதெரபி பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப படிவங்கள் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் வழங்கப்படும்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள 23 அரசு நர்சிங் கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு 2 ஆயிரம் சீட்டுகள் உள்ளன. இவற்றில் சேருவதற்கான விண்ணப்பங்களை ஜூன் மாதம் 2–வது வாரத்தில் வழங்க திட்டமிட்டுள்ளோம். இதுபற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு டாக்டர் சுகுமார் கூறினார்.

மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்து விட்ட நிலையில் முக்கிய படிப்புகளில் ஒன்றான நர்சிங் படிப்புக்கு மட்டும் விண்ணப்பம் வழங்குவது தாமதமாகி வருவதால் மாணவ–மாணவிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நர்சிங் பட்டப் படிப்புக்கும் சரி, டிப்ளமோ நர்சிங் படிப்புக்கும் சரி வேலைவாய்ப்பு அதிகமாக இருப்பதால் நர்சிங் படிப்பில் சேர மாணவிகள் அதிக ஆர்வமாக உள்ளனர்.

கடந்த ஆண்டு கட் ஆப் மார்க்

நர்சிங் பட்டப் படிப்புக்கான கட் ஆப் மார்க் பிளஸ்–2 இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மதிப்பெண்களின் அடிப்படையில் 200–க்கும், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு 100–க்கும் கணக்கிடப்படுகிறது.

கடந்த 2012–2013–ம் கல்வி ஆண்டில் நர்சிங் பட்டப் படிப்புக்கும் டிப்ளமோ படிப்புக்கும் இருந்த கட் ஆப் மார்க் பட்டியலை மருத்துவ தேர்வுக்குழு வெளியிட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:–

பி.எஸ்சி. நர்சிங் 

மாணவர்கள்

பொதுப்பிரிவு – 182.75

பிற்படுத்தப்பட்டோர் – 171.25

பிற்படுத்தப்பட்டோர்–முஸ்லிம் – 181.75

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 161

ஆதி திராவிடர் – 174.25

ஆதி திராவிடர் – அருந்ததியினர் – 174.25

மாணவிகள்

பொதுப்பிரிவு – 182.75

பிற்படுத்தப்பட்டோர் – 175.25

பிற்படுத்தப்பட்டோர்–முஸ்லிம் – 173.25

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 175

ஆதி திராவிடர் – 171.25

ஆதி திராவிடர் – அருந்ததியினர் – 175

பழங்குடியினர் – 151.50

டிப்ளமோ நர்சிங் 

உதவித்தொகையுடன் கூடியது

பொதுப்பிரிவு – 87

பிற்படுத்தப்பட்டோர் – 76.63

பிற்படுத்தப்பட்டோர்–முஸ்லிம் – 48.38

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 76.88

ஆதி திராவிடர் – 76.38

ஆதி திராவிடர் – அருந்ததியினர் – 73.38

பழங்குடியினர் – 61.75

உதவித்தொகை இல்லாதது

பொதுப்பிரிவு – 81.13

பிற்படுத்தப்பட்டோர் – 74.13

பிற்படுத்தப்பட்டோர்–முஸ்லிம் – 41.25

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 76

ஆதி திராவிடர் – 75.63

ஆதி திராவிடர் – அருந்ததியினர் – 72.38

பழங்குடியினர் – 57.63

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||