தமிழ்நாட்டில் பிளஸ்–1 படிக்கும் 6 லட்சத்து 50 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் பிளஸ்–1 படிக்கும் 6 லட்சத்து 50 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. அதற்காக உதிரிபாகங்களை கொண்டு சைக்கிள்களை உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் எழுத படிக்க தெரியாதவர்கள் யாரும் இருக்கக்கூடாது, உயர்கல்வியை எல்லோரும் படிக்கவேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தமிழக அரசு மாணவ–மாணவிகளுக்கு பல்வேறு விலை இல்லா திட்டங்களை உருவாக்கி அவற்றை வழங்கி வருகிறது. பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், கலர் பென்சில்கள், புத்தகப்பைகள், சைக்கிள்கள், லேப்டாப், சீருடை முதலியவற்றை வழங்கி மதியம் சாப்பிட சத்துணவையும் வழங்கி வருகிறது.

தற்போது பிளஸ்–1 வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்த வகுப்புகளில் படிக்கும் 6 லட்சத்து 50 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்கள் ரூ.200 கோடி செலவில் வழங்கப்பட உள்ளன.

அதற்காக சைக்கிள்கள் உதிரிபாகங்களாக வாங்கப்பட்டு அவை லாரிகளில் பள்ளிக்கூடங்களில் வந்து இறங்கி உள்ளன. ஒரு மாவட்டத்தில் கொடுக்கவேண்டிய பள்ளிகளுக்கு மாவட்டத்தில் 10 இடங்களில் வைத்து சைக்கிள் உதிரி பாகங்களை இணைத்து சைக்கிள்கள் தயாராகும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சென்னையை பொறுத்தவரை சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட பல பள்ளிகளில் இந்த பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மையத்திலும் தலா 100–க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் முழுமையாக்கப்பட்டு உள்ளன.

உருவாக்கப்பட்டுள்ள இந்த சைக்கிள்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் வரை வெயிலிலும், மழையிலும் நிறுத்தாமல் ஏதாவது கூரையின் கீழ் நிறுத்தினால் நல்லது என்று பொது நலம் கொண்டவர்கள் கூறுகிறார்கள்.No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||