இளநிலை ஆராய்ச்சியாளர் (ஜே.ஆர்.எப்.,) மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதித் தேர்வு, ஜூன் 23 ல் நடக்கிறது.

இளநிலை ஆராய்ச்சியாளர் (ஜே.ஆர்.எப்.,) மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதித் தேர்வு, ஜூன் 23 ல் நடக்கிறது. அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி குழுமம் (சி.எஸ்.ஐ.ஆர்.,) மற்றும் பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) இணைந்து நடத்தும், தேசிய தகுதித் தேர்வு, நாடு முழுவதும், 26 மையங்களில் நடக்க உள்ளது.
தேர்வில், 2 லட்சத்து 90 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் சென்னை, காரைக்குடி மையங்களில் நடக்கிறது. காரைக்குடி மையத்தில் 6,400 பேர், தேர்வு எழுதுகின்றனர். தேர்வுக்கு பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு, ஹால் டிக்கெட், தபாலில் அனுப்பப்படாது. www.csirhrdg.res.in என்ற இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

ஹால் டிக்கெட்டில், போட்டோ இல்லை எனில், தேர்வு அன்று, இரண்டு பாஸ்போர்ட் போட்டோ மற்றும் பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, இவற்றில் ஏதேனும் ஒன்றை, கொண்டு வர வேண்டும்.

காலை 9 முதல் 12 மணி வரை, உயிர் அறிவியல், புவி வானவியல், கடல் மற்றும் கோளவியல் அறிவியல், கணித அறிவியல் தேர்வு; மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை, வேதி அறிவியல், இயற்பியல் அறிவியல், பொறியியல் அறிவியல் தேர்வும் நடக்கும்.

தேர்வு மையத்தில், ஹால்டிக்கெட் நகல் வழங்கப்படாது. தேர்வு மையத்திற்கு மாணவர்கள், 30 நிமிடத்திற்கு முன், வரவேண்டும். விபரங்களுக்கு, 04565- 241 400, 94438 50679, 94436 09776 என்ற எண்கள்; swamy23@rediffmail.com, npswamy@cecrires.in என்ற , மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்" என சிக்ரி விஞ்ஞானி மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||