டி.இ.டி., விண்ணப்ப தேதி முடிந்தது: ஆறு லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனை லட்சம் பேர் விண்ணப்பித்தனர், அவர்களில், ஆண்கள் எத்தனை பேர்; பெண்கள் எத்தனை பேர் என்ற விவரங்களை, ஓரிரு நாளில், டி.ஆர்.பி., வெளியிடும் என தெரிகிறது.

டி.இ.டி., தேர்வுக்கு, விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு முடிந்தது. ஆறு லட்சம் பேர், இந்த தேர்வை எழுதுகின்றனர். அரசு பள்ளிகளில், காலியாக உள்ள, 15 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 17,18 தேதிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வை, டி.ஆர்.பி., நடத்துகிறது. இதற்காக, கடந்த மாதம், 17ம் தேதி முதல், 2,500 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தன. விண்ணப்பம் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைக்கவும், நேற்று கடைசி நாள். இதனால், மாநிலம் முழுவதும், விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், அனைத்து இடங்களிலும், கூட்டம் அலைமோதியது. சென்னை மாவட்டத்தில், 21 மையங்களிலும், விண்ணப்ப விற்பனை, விறுவிறுப்பாக நடந்தன. எத்தனை லட்சம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர் என்ற விவரம், சரியாக தெரியவில்லை. எனினும், ஆறு லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனை லட்சம் பேர் விண்ணப்பித்தனர், அவர்களில், ஆண்கள் எத்தனை பேர்; பெண்கள் எத்தனை பேர் என்ற விவரங்களை, ஓரிரு நாளில், டி.ஆர்.பி., வெளியிடும். 1,100 மையங்களில், இந்த தேர்வுகள் நடக்க உள்ளன.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||