யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் விபரங்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

யு.பி.எஸ்.சி., என்ற மத்திய பணியாளர் தேர்வாணையம், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., .உட்பட உயர் பதவிகளுக்கு சிவில் சர்வீசஸ்‌ தேர்வு நடத்துகிறது. முதல் நிலை , பிரதான தேர்வு, ‌நேர்முகத்தேர்வு என 3 கட்டமாக நடக்கிறது. இதில், முதல் நிலை மற்றும், பிரதானதேர்வில், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் தபால் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் விபரங்களை, யு.பி.எஸ்.சி., இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.