ஆதிதிராவிடர் மாணவருக்கு கட்டண விலக்கு: கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு

கலந்தாய்வு மூலம், கல்லூரிகளில் சேரும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு, சுயநிதி கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு மற்றும் அரசு நிர்ணயிக்கும் கட்டணம், அரசால் வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள, அனைத்து சுயநிதி கல்வி நிறுவனங்களில், இலவசம், கட்டணம், நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ, ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு, சுயநிதி கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு மற்றும் அரசு நிர்ணயிக்கும் கட்டணம், கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், அரசால் செலுத்தப்படும்.

இவ்விவரம், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், தெரியப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது, கலந்தாய்வு மூலம், கல்லூரியில் சேர்க்கை நடைபெறும் பொறியியல், மருத்துவம், கல்வியியல் மற்றும் இதர படிப்புகளுக்கு, கட்டணம் வசூலிக்கக் கூடாது என, அரசு உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய சுயநிதி கல்வி நிறுவனங்கள், தேவையான கட்டணங்களை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில், நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.

கட்டண விலக்கு பெற விரும்பும் மாணவர், கலந்தாய்வின்போது, அசல் ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பான அரசாணையை, www.tn.gov.in மற்றும் www.tnteu.in இணையதளங்களில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||