தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு நடைபெற்ற கலந்தாய்வில் மாறுதல் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்களை தற்சமயம் பணிபுரியும் பள்ளியில் இருந்து உடனடியாக விடுவிக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு நடைபெற்ற கலந்தாய்வில் மாறுதல் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்களை தற்சமயம் பணிபுரியும் பள்ளியில் இருந்து உடனடியாக விடுவிக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறையில் இயக்குநர்கள் மாற்றம் | புதிய பள்ளிக்கல்வி இயக்குநராக திரு ராமேஸ்வர முருகன் அவர்களையும், தேர்வுத்துறை இயக்குநராக திரு தேவராஜன் அவர்களையும் நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கட்டுபாட்டிலுள்ள துறைகளின் இயக்குநர்கள் மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் இயக்குநர்கள் மாற்றம்

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக விபு நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.இப்பணியிலிருந்த சுர்ஜித் சவுத்ரி, மத்திய அரசுப் பணிக்கு செல்கிறார்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், நான்கு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, அரசு துணைச் செயலர் சிவசண்முக ராஜா, ஆதிதிராவிட நலத்துறை இயக்குனராகவும், அப்பதவியில் இருந்த விஜய ராஜ்குமார், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் மேலாண் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் மற்றும் நீர் ஆதார மேலாண்மை திட்ட இயக்குனராகப் பணிபுரிந்த விபு நாயர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பணியிலிருந்த சுர்ஜித் சவுத்ரி, மத்திய அரசுப் பணிக்கு செல்கிறார்.வேளாண்மைத் துறை, அரசு சிறப்பு செயலர் அசோக்ரஞ்சன் மொகந்தி, மாநில மனித உரிமை ஆணையச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

"மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு ஆசிரியர்கள் தேர்வில், இந்தாண்டு புதிய நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வி துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார் .

"மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு ஆசிரியர்கள் தேர்வில், இந்தாண்டு புதிய நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வி துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.மதுரையில் தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி தலைமை வகித்தார். இயக்குனர் பேசியதாவது: மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதில் இந்தாண்டு புதிய நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சி.இ.ஓ., தலைமையில் டி.இ.ஓ.,க்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மற்றும் இரண்டு தலைமை ஆசிரியர்கள் கொண்ட "தேர்வுக் குழு' அமைக்கப்படும். 

விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் குறித்து, அவர்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கு சென்று, அவரது விவரம், மாணவர் மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக ஆற்றிய சேவை, செயல்படுத்திய திட்டங்கள், அவரது பணிக்கால பதிவேடுகள் விசாரிக்கப்பட்டு, அறிக்கை தயாரிக்கப்படும். இணை இயக்குனர் அளவிலான நேர்காணலும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும். இதன்பின், தேர்வுக் குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில், விருதுகளுக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.நடப்பாண்டில் பள்ளிகளில் விளையாட்டிற்காக மட்டும் ரூ.10 கோடி அரசு ஒதுக்கியுள்ளது. கல்வி மாவட்ட, வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை ஆசிரியர்கள் நடத்த வேண்டும். அறிவியல் கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுடன் ஆசிரியர்கள் நல்லுறவை வளர்க்க வேண்டும், பாடம் தவிர்த்து மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆசிரியர்கள் செயல்பாடு அமைய வேண்டும், என்றார்.அரசு நலத்திட்டங்களை பள்ளிகளுக்கு நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தினர். "கல்வி அதிகாரிகளிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்,' என இயக்குனர் பதிலளித்தார். 

மூன்றாண்டு பி.எல்., சட்டப் படிப்பிற்கான விண்ணப்ப தேதி, ஆக., 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மூன்றாண்டு பி.எல்., சட்டப் படிப்பிற்கான விண்ணப்ப தேதி, ஆக., 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், மூன்றாண்டு சட்டப் படிப்பிற்கான விண்ணப்ப வினியோகம் நடந்து வருகிறது. இப்படிப்பிற்கு 30ம் தேதி விண்ணப்ப வினியோகம் முடிவடைய உள்ள நிலையில், மாணவர்களின் வேண்டுகோளை அடுத்து, ஆக., 16ம் தேதி வரை, விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தொலைதூர கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும், சான்றிதழ் மற்றும் பட்டய படிப்பிற்கான விண்ணப்ப தேதி, ஆக., 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் சங்கர் கூறியதாவது: அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் மூன்றாண்டு பி.எல்., சட்டப் படிப்புகளில் உள்ள, 1,262 இடங்களுக்கு, 4,300 விண்ணப்பங்கள்; பி.எல்., (ஹானர்ஸ்) சட்டப் படிப்பில் உள்ள, 60 இடங்களுக்கு, 400 விண்ணப்பங்கள்; எம்.எல்., சட்டப் படிப்பில் உள்ள, 160 இடங்களுக்கு, 118 விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன.இவ்வாறு சங்கர் தெரிவித்தார்.

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்விற்கான TENTATIVE ANSWER KEY இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர் , உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) பணி இடங்களை நிரப்ப கடந்த 21-ம் தேதி போட்டி தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதினார்கள். தேர்வு எழுதிய அனைவருக்கும் அவர்களின் விடைத்தால் நகலும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், தேர்வுக்கான ‘கீ ஆன்சர்’-ஜ ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வினா வகை (ஏ,பி,சி,டி) வாரியாக தெரிந்து கொள்ளலாம். தேர்வு எழுதிய ஆசிரியர்கள் தங்கள் விடைத்தால் நகலை பார்த்து தங்கள் மதிப்பெண்ணை துல்லியமாக அறிய முடியும். தேர்வு முடிவை ஒரு மாதத்தில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவையடுத்து, தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த, 652 கணினி ஆசிரியர்களை, தமிழக அரசு பணி நீக்கம் செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவையடுத்து, தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த, 652 கணினி ஆசிரியர்களை, தமிழக அரசு பணி நீக்கம் செய்தது. இதனால், ஏழு ஆண்டுகளாக, கணினி ஆசிரியர்கள் பணியில் நிலவி வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

தமிழகத்தில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 1999ம் ஆண்டு, 2,324 கணினி ஆசிரியர்கள், 1,500 ரூபாய் சம்பளத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். பின், 2004ல், 2,000 ரூபாய் தொகுப்பூதியத்திற்கு மாற்றப்பட்டனர்.இதையடுத்து, பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து, 2006ம் ஆண்டு, 1,850 கணினி ஆசிரியர் பணியிடங்களை புதிதாக தோற்றுவித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த, அரசு உத்தரவிட்டது.இத்தேர்வில், கணினி ஆசிரியர்கள், 1,714 பேர் தேர்வு எழுதினர். முதலில், தேர்வு பெற, 50 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும் என, அரசு அறிவித்தது. பின், இத்தேர்வு மதிப்பெண்ணில் விலக்கு அளித்து, 35 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும் என, அறிவித்தது. இதன்படி, 35 சதவீத மதிப்பெண் பெற்ற, 1,686 கணினி ஆசிரியர்கள், தேர்வில் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், பி.எட்., முடித்த கணினி பட்டதாரி ஆசிரியர் சங்கம், தேர்ச்சி மதிப்பெண்ணை, 50 சதவீதத்தில் இருந்து, 35 சதவீதமாக அரசு குறைத்ததை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், 894 பேர் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர்.தொடர்ந்து, 35 சதவீதம் முதல், 50 சதவீதம் வரை பெற்ற 792 ஆசிரியர்கள், மறுதேர்வு எழுத வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த 2010, ஜனவரி 24ம் தேதி, 792 பேருக்கு மறுதேர்வு நடத்தியது.

அதில், 125 பேர் தேர்வு பெற்றனர்; மீதமுள்ள 667 பேர், தேர்வில் தோல்வியடைந்தனர். "வினாத்தாள் குளறுபடியால், தேர்வில், அதிகளவில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டது. எனவே, கேள்வித்தாளை சரிபார்க்க வேண்டும்' என, ஐகோர்ட்டில், மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது.இதை விசாரித்த ஐகோர்ட், வினாத்தாள் ஆய்வு செய்ய, ஐ.ஐ.டி., கணினி ஆசிரியர் குழுவை அமைத்தது. இக்குழு, 150 கேள்விகளில், 20 கேள்விகள் தவறு என்றும், ஏழு கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க முடியவில்லை எனவும் அறிக்கை சமர்ப்பித்தது. இதையடுத்து, ஐகோர்ட், தேர்வெழுதிய, 667 பேரில், 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்ய உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், 667 ஆசிரியர்களில் இருந்து, 15 பேர் மட்டுமே தேர்வு பெற்றனர். இதையடுத்து, பி.எட்., ஆசிரியர் சங்க வழக்கின் அடிப்படையில், தகுதியில்லாத, 652 பேரை பணி நீக்கம் செய்ய, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தொடர்ந்து, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வந்த, 652 கணினி ஆசிரியர்களை, பள்ளிக் கல்வித் துறை  பணி நீக்கம் செய்தது.

இதுகுறித்து, மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம், மாநிலத் தலைவர் செல்வகுமார் கூறுகையில், ""டி.ஆர்.பி.,யின் குளறுபடியான கேள்வித்தாள், அதிகளவிலான ஆசிரியர்கள் தோல்விக்கு காரணம். பணி நீக்கம் செய்யப்பட்ட, 652 கணினி ஆசிரியர்களும், இப்பணிக்குரிய அனைத்து கல்வித் தகுதிகளையும் பெற்றுள்ளவர்கள். எனவே, கருணை அடிப்படையில், பணி வழங்க அரசு முன்வர வேண்டும்,'' என்றார்.

பிளஸ் 2 வகுப்பிற்கு, 2016-17ம் கல்வி ஆண்டில் தான், புதிய பாடத் திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது .

ஐ.ஐ.டி., பாடத் திட்ட தரத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. தயார் செய்யப்பட்டுள்ள வரைவு பாடத் திட்டம், வரும், 24ம் தேதி நடக்கும் அதிகாரிகள் கூட்டத்தில், இறுதி செய்யப்படுகிறது.

தற்போதுள்ள பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆறு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. எனவே, தற்போதைய காலத்திற்கு ஏற்றார் போல், புதிய பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டது.இதற்காக, சென்னை, ஐ.ஐ.டி.,யின் ஓய்வு பெற்ற பேராசிரியர் நாகபூஷணம் தலைமையில், பாட வாரியாக, நிபுணர் குழு அமைக்கப்பட்டு, வரைவு பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகத்தின் மேற்பார்வையில், பாடத் திட்டம் தயாரிக்கும் பணி, நடந்து வருகிறது.பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய, இரு வகுப்புகளுக்கும், தலா, 24 பாடத் தலைப்புகளில், வரைவு பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, சமீபத்தில், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

வரைவு பாடத் திட்டம் குறித்து, 500க்கும் மேற்பட்டோர், பல்வேறு கருத்துகளை தெரிவித்திருப்பதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு, தரமான கருத்துகள், பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும், துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 மாணவர்கள், ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வை எழுதி, வெற்றி பெறும் வகையில், தரமான பாடத் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளன என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில், ""ஐ.ஐ.டி., கணித பாடத் திட்டங்களை பின்பற்றி, இவர்களின் பாடத்தை உருவாக்கி உள்ளோம். பிளஸ் 2 மாணவர்கள், புதிய கணிதத்தை படிக்கும்போது, ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான தகுதியை பெற முடியும்,'' என, தெரிவித்தார்.

வரைவு பாடத் திட்டம், தற்போது இறுதி செய்யப்பட்டு உள்ளது. வரும், 24ம் தேதி காலை, 10:00 மணிக்கு, பாடநூல் கழக அலுவலகத்தில் நடக்கும், அரசு உயர்மட்ட கூட்டத்தில், வரைவு பாடத் திட்டம் இறுதி செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது. அரசின் ஒப்புதல், மிக விரைவில் கிடைத்துவிடும் என, கல்வித் துறை எதிர்பார்க்கிறது.

அரசின் அனுமதி கிடைத்ததும், பாடப் புத்தகம் எழுதும் பணி துவங்கும். புத்தகம் எழுதுவதற்கு, ஒரு ஆண்டு வரை ஆகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரும் கல்வி ஆண்டில் (2014-15), பிளஸ் 1 வகுப்பிற்கு அறிமுகப்படுத்த இருந்த, புதிய பாடத் திட்டம், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில் (2015-16) அமல்படுத்தப்படுகிறது.இதனால், பிளஸ் 2 வகுப்பிற்கு, 2016-17ம் கல்வி ஆண்டில் தான், புதிய பாடத் திட்டம் அமலுக்கு வரும்.

ஆசிரியர் தகுதி தேர்விற்கு பயன்படும் சூர்யா பதிப்பகத்தின் வினா வங்கி புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2013–2014) பி.எட். பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என தெரிகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2013–2014) பி.எட். பட்டப் படிப்புக்கான ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் மூலமாக நடைபெற உள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவன முதல்வரும், தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளருமான பேராசிரியை ஜி.பரமேஸ்வரி அறிவித்துள்ளார்.

TNTET SURYA STUDY MATERIALS AND QUESTION BANK


S.NO
DISTRICT
STOCKISTS
PHONE NUMBER
1.CHENNAI 
Surya Publications
4, Murthy Street,
West Mamblam,
Chennai
044-24893363,                 9442558484
2.CHENNAI 
M.K.Stores
64, Bundar Street, 
Chennai - 1.

044 - 25386955, 25386143, 25390409  

3.CHENNAI 
Bismi Book Centre
187, N.S.C. Bose Road, 
Chennai -1.

044 - 25380666, 25363375. 

4.TRICHY 
Sumathy Publications
3, Tamil Sangam Building, 
W.B. Road, Tiruchy.

0431 - 2703230,                        98424-88555.

5.TRICHY
Rasi Publications
1,2 Tamil Sangam Building, 
W.B. Road, Tiruchy.

0431 - 2703692,                           9443888564. 

6.TIRUNELVELI
Sri Shyamala Puthaga Nilayam,
50, T.M. Building 
Tirunelveli Junction.
0462 - 2322277, 2338899
9443158484,9442158484
7.TIRUNELVELI
Sri Shyamala Book Shop,
61, North Car Street, 
Tirunelveli Town.
0462 – 2338800, 9443158484, 9442158484
8.KANYAKUMARI
Komala Stores,
67, W.C. College Road, 
Nagercoil. 

04652 - 233519, 227018,     9443360928

9.MADURAI
Mano Book Centre
15, Pudu Mandapam, 
Madurai. 
0452 - 2621577,            9443321577.
10.MADURAI
Jeyam Book Centre
25, Pudu Mandapam, 
Madurai.
0452 - 2623636,           9894658036. 
11.COIMBATORE
Radhamani Stores
137, Raja Street, 
Coimbatore - 1.
0422 - 2392122, 2393532
12.COIMBATORE
Cheran Book House,
238, Big Bazaar Street, 
Clock Tower Circle,             Coimbatore. 
0422 - 2396623,           9842290126
13.SALEM
A.K.Chandriah Chettiar & Sons
252/161B, Cherry Road, 
Salem - 636 001.

0427 - 2410096,           9787552233.

14.SALEM
Sri Vignesh Book Centre
224, Main Road, Shevapet, 
Salem.
0427 - 2223304,            9942010233.
15.ERODE
Selvam Book Centre
11C, Gandhiji Road, 
Near Central Theatre, Erode. 

0424 - 2257027, 2252176. 

16.ERODE
Senthil Book Palace
123, Prakasam Road, 
Erode.
0424 - 2214886,  9443035775
17.CUDDALORE
Cuddalore Emporium
5, Lawrence Road, 
Cuddalore.
04142 - 235429,           9443882028. 
18.CUDDALORE
Manivasagar Noolagam
12,13 West Sannathi, 
Chidambaram -1.

04144 - 222856. 

19.CUDDALORE
Vetri Book Centre
83, West Car Street, 
Chidambaram.
04144 - 222648 , 9443222648
20.DINDIGUL
Ayyanar Book Centre
14, Dudley School Building,
Dindigul

0451-2426561, 
9486208869
21.KRISHNAGIRI
Vijaya Book Centre
2, First Floor,                      D.D.D.C. Building
Old Sub-Jail Road,  Krishnagiri
9443812533
22.DHARMAPURI
Sri Krishna School Needs
22, Mohammed Ali Club Road,
Near Bus Stand, Dharmapuri,
91500 70035,                9150070034
23.THANJAVUR
Arasu Paper Stores
Big Street, 
Pattukottai.
04373-257507,  9442890053,                       9791950463
24.THANJAVUR
Sri Murugan Publications
Raja Rajan Vaniga Valaga Arangam, 
Thanjavur.
04362 - 2272922, 2272168, 
25.THANJAVUR

Markendeya Book Depot.
48, Kumbeswarar Sannathi, 
Kumbakonam - 1.

0435 - 2420750, 2425539. 
26.NAGAPATTINAM

Mayura Books
32, Kamarajar Bus Stand, 
Mailaduthurai -1.

04652-227292
27.TIRUPUR
Chola Book House
70, G.G. Towers,                  Opp. to Town Hall,
Kumaran Road, Tirupur
04651-270916
28.THIRUVANNAMALAI
A.Pitchandi Mudaliyar
A.P.M Stores
47/A-250,Thiruvoodal St, 
Thiruvannamalai.
94432 14725,                    94864 66665,                      94431 66665,                           04175 - 223854, 224725                          
29.VILLUPURAM
Sabarinathan Bros.
89C, Thiru-vi-ka Road, 
Villupuram - 605 602.
04146 - 224190, 222581,  9443425972
30.VILLUPURAM
Arunagh Traders
59, Salem Main Road, 
Kallakurichi.
98427 -22381.
31.VILLUPURAMBalu Xerox & Books,               BAM Complex                        Near Bus Stand                     Gingee9994622199
32.TIRUVARURJshree Agencies,                 6,Kamarajar St        Kidaramkodan(Near Thiru-Vi-Ka Govt Arts college )   Tiruvarur-39486259870,                8925345718
33.CHENNAISuccess Book House         No:2137,L Block,                      7th Street,12th Main Road Anna Nagar, Chennai-40 044.42612214,                 9884912274
34....
...

மூன்று நபர் ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் இதுவரை 88 அரசாணைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மூன்று நபர் ஊதியக் குழு - பட்டதாரி இளநிலை உதவியாளர் மற்றும் நேரடி நியமிக்கப்படும் உதவியாளர் பதவிக்கு இடையே உள்ள ஊதிய வித்தியாசத்தை "தனி ஊதியம்" ஆக வழங்க தமிழக அரசு உத்தரவு

மூன்று நபர் ஊதியக் குழு - பட்டதாரி இளநிலை உதவியாளர் மற்றும் நேரடி நியமிக்கப்படும் உதவியாளர் பதவிக்கு இடையே உள்ள ஊதிய வித்தியாசத்தை "தனி ஊதியம்" ஆக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.G.O.Ms.No.241 Dt: July 22, 2013 Download  

RE - OPTION அளிக்கும் வாய்ப்பு - G.O.Ms.No.240 Dt: July 22, 2013

1.1.2006-31.5.2009 இக்கு இடைப்பட்ட காலத்தில் தேர்வு / சிறப்பு நிலை எய்தியவர்கள் , ஆறாவது ஊதிய குழு ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளும் போது தேர்வு / சிறப்பு நிலையில் ஊதியம் பெற்று கொண்ட பின்னர் புதிய ஊதிய விகத்தில் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ள ஏற்கனவே வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது . உதாரணமாக பழைய ஊதிய விகிதத்தில் 1.7.2008 இல் ஒருவர் தேர்வு நிலை பெற்றிருந்தால் , அவர் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்யும்போது , 1.1.2006 லேயே புதிய ஊதிய விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்துகொள்ளாமல் , 1.7.2008 வரை பழைய ஊதிய விகிதத்தில் இருந்து விட்டு தேர்வு நிலை பெற்ற பின்னர் புதிய ஊதிய விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ள OPTION கொடுக்க முன்னரே வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது . அதாவது தேர்வுநிலை பெற்ற பின்னர் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்வதால் 9300 இல் ஊதிய நிர்ணயம் செய்துகொண்டு தர ஊதியம் 4300 பெறலாம் . இந்த வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது .G.O.Ms.No.240 Dt: July 22, 2013 Download

பள்ளிக்கல்வி - மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள தமிழ் பண்டிட், தொழிற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் கிரேடு - I / II, இளநிலை விரிவுரையாளர், TTI முதல்வர், DIET விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தர ஊதியம் மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வி - மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள தமிழ் பண்டிட், தொழிற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் கிரேடு - I / II, இளநிலை விரிவுரையாளர், TTI முதல்வர், DIET விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தர ஊதியம் மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. G.O.Ms.No.263 Dt: July 22, 2013 -Download

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலைக்கு கூடுதலாக ஒரு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு

மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் பேரில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண். 237 நாள்.22.07.2013ல் தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு கூடுதலாக ஒரு ஊதிய உயர்வு 01.01.2006 தேதி முதல் நடைமுறைப்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது(அதாவது 3% + 3%). பணப்பலன் 01.04.2013 முதல் வழங்கப்படும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது (Selection Grade and Special Grade Notional Effect from 01.01.2006 and Monetary Effect from 01.04.2013). 01.01.2006 முதல் 31.05.2009 வரை தேர்வு நிலை / சிறப்பு நிலை முடித்தோற்கு ஊதிய விகிதம் மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால், 01.06.2009க்கு பின் தேர்வு நிலை / சிறப்பு நிலை முடித்தோற்கு ஊதிய விகிதம் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை, மாறாக அவர்களுக்கு 3% ஊதிய உயர்வு மட்டுமே வழங்கப்பட்டது. அது தற்போது 01.01.2006 முதல் நடைமுறைப்படுத்தி இந்த ஆணை அமுலுக்கு வருவதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலன் பெறுவர்.G.O.Ms.No.237 Dt: July 22, 2013 Download 

பள்ளிக் கல்வித்துறையில், 16 மாவட்ட கல்வி அலுவலர்களை, முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும், 10 முதன்மை கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கியும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில், 16 மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்களாக, பதவி உயர்வு பெற்றுள்ளனர். கல்வித்துறையில், மாவட்ட கல்வி அலுவலர்(டி.இ.ஓ.,) மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) பணியிடங்கள், அதிக அளவில் காலியாக இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம், 45 தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களாக, பதவி உயர்வு பெற்றனர். அதுபோல், மாவட்ட கல்வி அலுவலர்களாக உள்ள, 16 பேர், முதன்மை கல்வி அலுவலர்களாக, பதவி உயர்வு பெற்றனர். இதற்கான உத்தரவை, பள்ளிக் கல்வித்துறை நேற்று வெளியிட்டது. DOWNLOAD

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 49 பேர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,), மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 49 பேர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,), மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டு உள்ளனர். பள்ளி கல்வித் துறையில், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள், அதிகளவில், பல மாதங்களாகக் காலியாக இருந்து வந்தன. இந்தப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் குரல் கொடுத்தன. இந்நிலையில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 49 பேருக்கு, பதவி உயர்வு வழங்கி, கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த வாரத்திற்குள், காலியாக உள்ள, 17 முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும், பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின், இணை இயக்குனர்கள் பதவி உயர்வு, இயக்குனர் பதவி உயர்வு உத்தரவுகளும் வெளியாகும் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.DEO LIST

மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வுகள் முடிவுகள் இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.

ஜூன் 19 முதல் ஜூலை 01, 2013 தேதி வரை நடைபெற்ற மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வினை எழுதிய 83,510 தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் நாளை 25.07.2013 நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் 30.07.2013 அன்று மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் விரைவில் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. செய்முறை அடங்கிய பாடத்தினை தேர்வு எழுதிய சில தனித்தேர்வர்கள் செய்முறை குறித்த ஆவணத்தை ஆன்-லைன் விண்ணப்பத்துடன் இணைந்து சமர்பிக்காததால், அவர்களது தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில தனித்தேர்வர்களின் மார்ச் 2013 பருவத் தேர்வெழுதிய பதிவெண் தேர்வுத்துறை அலுவலக ஆவணத்துடன் tally ஆகாததால், அவர்களுடைய தேர்வு முடிவுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தகைய தனித்தேர்வர்கள் உடனடியாக அவர்கள் வருவாய் மாவட்டத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு மார்ச் 2013 மேல்நிலைத் தேர்வெழுதிப் பெற்ற மதிப்பெண் சான்றிதழினை ஒப்படைக்க வேண்டும் என தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகு தான் அவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மார்ச் 2013 -ல் நடைபெற்ற பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி மற்றும் ஆசிரியர்களுக்கும் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கும் பாராட்டு விழா.

பிளஸ்–2 தேர்வில் பெயிலாகி துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு என்ஜினீயரிங் கலந்தாய்வு 28–ந்தேதி நடக்கிறது

பிளஸ்–2 தேர்வில் பெயிலாகி துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு என்ஜினீயரிங் கலந்தாய்வு 28–ந்தேதி நடக்கிறது. ஆனால் அவர்கள் 27–ந்தேதி நேரடியாக விண்ணப்பிக்கவேண்டும். அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ராஜாராம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

என்ஜினீயரிங் கலந்தாய்வு 26–ந்தேதி மாலை முடிவடைகிறது. அப்போது காலியாக உள்ள பி.இ. இடங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான மற்றொரு கலந்தாய்வு 28–ந்தேதி நடத்தப்படுகிறது. இதில் பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி பெயிலாகி இருந்த மாணவர்கள் சமீபத்தில் நடைபெற்ற சிறப்பு துணைத்தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று தகுதி படைத்தவர்கள் கலந்துகொள்ளலாம்.

ஆனால் அந்த மாணவ–மாணவிகள் 27–ந்தேதி அண்ணாபல்கலைக்கழகத்திற்கு வந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அன்றே ஒப்படைக்கவேண்டும். அந்த மாணவர்கள் பிளஸ்–2 மதிப்பெண் சான்று, தேர்வு எழுதிய அனுமதி கடிதம் (ஹால்டிக்கெட்), 10–வது வகுப்பு மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், நிரந்தர சாதி சான்றிதழ், முதல் பட்டதாரிகளுக்கான சான்று மற்றும் உறுதி அளிப்பு படிவம், புகைப்படம் ஆகியவற்றுடன் 27–ந்தேதி வரவும். விண்ணப்பத்தொகை ரூ.500. ஆதிதிராவிடர், அருந்ததியினர், பழங்குடியினர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 மட்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு | ஒரு வாரத்திற்குள் "கீ-ஆன்சர்' வெளியீடு | 20 நாட்களுக்குள் தேர்வு முடிவு | பல்வேறு எழுத்துப் பிழைகளுடன் இருந்த வணிகவியல் மற்றும் தமிழ்க்கேள்வித்தாளால் தேர்வர்கள் பாதிக்காத வகையில் உரிய முடிவு எடுக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரித்துள்ளது.

"முதுகலை ஆசிரியர் தேர்வில், தமிழ் மற்றும் வணிகவியல் பாட கேள்வித்தாளில் ஏற்பட்ட பிரச்னையால், தேர்வர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். "கீ-ஆன்சர்' வெளியிடுவதற்கு முன், கேள்வித்தாளில் ஏற்பட்ட பிழைகள் குறித்து, பாட வல்லுனர்களின் ஆலோசனையை பெற்று, உரிய முடிவு எடுக்கப்படும்' என, டி.ஆர்.பி., வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, நேற்று முன்தினம், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு நடந்தது. 1.59 லட்சம் பேர், தேர்வை எழுதினர். இதில், தமிழ்ப் பாட தேர்வர்களுக்கு தரப்பட்ட கேள்வித்தாளில், பல்வேறு கேள்விகளில், எழுத்துப் பிழைகள் இருந்தன. மேலும், வணிகவியல் பாட கேள்வித்தாளில், ஆங்கிலத்தில் இருந்து, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கேள்வியில், பிழை ஏற்பட்டது. இந்த இரு பிரச்னைகள் குறித்தும், டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு, உடனடியாக தெரிய வந்தது.

இந்த விவகாரம் குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள், நேற்று கூறியதாவது: தமிழ்ப் பாடத்திற்கான கேள்வித்தாளில், எழுத்துப்பிழைகள் அதிகம் ஏற்பட்டிருப்பது உண்மை தான். அச்சக நிறுவனம், கேள்வித்தாளில், பிழை இருக்கிறதா என்பதை சரிபார்த்து, செயல்பட்டிருக்க வேண்டும். அச்சகங்களில், பாட வாரியாக, நிபுணர்கள் இருக்கின்றனர். அவர்கள், கேள்வியை படித்துப் பார்த்து, ஏதாவது பிழைகள் இருக்கிறதா என்று சரிபார்ப்பர். தமிழ்ப் பாடத்தில், சரிபார்ப்பு நடந்ததா என, தெரியவில்லை. இது குறித்து, விசாரிக்கப்படும். வணிகவியலில், ஒரே ஒரு கேள்வி, தமிழில், சரியாக மொழிபெயர்க்கப்படவில்லை. இந்த பிரச்னைகள் குறித்து, "கீ-ஆன்சர்' வெளியிடுவதற்கு முன், பாட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, தேர்வர்கள் பாதிக்காத வகையில், உரிய முடிவு எடுக்கப்படும்.

ஒரு வாரத்திற்குள் "கீ-ஆன்சர்' வெளியிடப்படும். அதன்பின், விடையில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால், சம்பந்தப்பட்ட தேர்வர்கள், டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு கொண்டு வரலாம். அது குறித்தும், பாட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, முடிவை எடுப்போம். இதன்பிறகே, விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நடக்கும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. மாவட்டங்களில் இருந்து, சீலிடப்பட்ட விடைத்தாள் கட்டுகள், நேற்று, சென்னைக்கு, போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. விரைவில், விடைத்தாள்களை, "ஸ்கேன்' செய்து, 20 நாட்களுக்குள், தேர்வு முடிவை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil அல்லது Ph.Dக்கான இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 18.01.2013 முதல் வழங்கலாம் என பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.

பள்ளி கல்வித் துறையில், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களில், 1,800 பேர், விரைவில், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பள்ளி கல்வித் துறையில், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களில், 1,800 பேர், விரைவில், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

கல்வித் துறையில், பணியின் போது மரணம் அடைந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு, படிப்படியாக, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. 2001 வரை விண்ணப்பித்த, 400க்கும் மேற்பட்டோருக்கு, ஏற்கனவே, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

தற்போது, 2009 வரை காத்திருக்கும், 500 பேருக்கு, விரைவில் வேலைவாய்ப்பு வழங்க, பள்ளி கல்வித்துறை, நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக, விண்ணப்ப சரிபார்ப்பு பணி, மாவட்ட கல்வி அலுவலகங்களில் நடந்து வருகிறது.

"தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர், சரிபார்ப்பு பட்டியலில், தங்களின் பெயர் இருக்கிறதா என்பதை, மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம், உறுதி செய்து கொள்ளலாம்" என துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், ஆக., 25ம் தேதி நடக்கும் "குரூப்-4" தேர்வு மூலம், பள்ளி கல்வித்துறைக்கு, 1,300 இடங்கள் ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யும் போது, தமிழாசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க, அரசு பரிசீலனை செய்து வருகிறது.

உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யும் போது, தமிழாசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க, அரசு பரிசீலனை செய்து வருகிறது.

உயர்நிலைப் பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம், பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. 160 மாணவர்கள் இருந்தால், ஐந்து ஆசிரியர்கள் இருப்பார்கள். 160 க்கு மேல் மாணவர்கள் இருக்கும் போது, கூடுதலாக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய வேண்டும்.

அப்படி பணி நியமனம் செய்யும் பட்சத்தில், முதலில் தமிழாசிரியர்கள், இரண்டாவதாக கணித ஆசிரியர், மூன்றாவதாக அறிவியல் ஆசிரியர், நான்காவதாக சமூக அறிவில் ஆசிரியர், ஐந்தாவது ஆங்கில ஆசிரியர் என்ற வரிசைப்படி, பணி நியமனம் செய்ய, அரசு பரிசீலனை செய்து வருகிறது.

முன்பு, தமிழாசிரியர்கள் நியமனமானது, ஐந்தாவது நிலையில் இருந்தது. தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இதை மாற்றி, முதல் இடத்திற்கு கொண்டு வர, அரசு பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் கூடுதல் ஆசிரியர்கள் பணி நியமனம் வரவிருப்பதால், தமிழாசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் மாணவர்களை அனுமதிக்க, நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) வெளியிட்ட அறிவிப்பை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் மாணவர்களை அனுமதிக்க, நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) வெளியிட்ட அறிவிப்பை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது.

பொது நுழைவுத் தேர்வு தொடர்பான இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பு அரசியல்சாசன சட்டத்தை மீறுவதாக உள்ளது என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

மூன்று நீதிபதிகள் அடங்கிய இந்த அமர்வில் 2 நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்புக் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் ஏற்கெனவே பொது நுழைவுத் தேர்வு மூலம் நடைபெற்ற மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை இந்த தீர்ப்பு எந்த வகையிலும் பாதிக்காது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த தீர்ப்பு மூலம், தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், மாணவர் சேர்க்கைக்கு தாங்களாகவே நுழைவுத் தேர்வை நடத்திக் கொள்ள உரிமை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்த பொது நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது. சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தின் அடிப்படையில் இந்த பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்பதால் பிற கல்வி முறையில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதும், மாநிலத்தில் கடைப்பிடிக்கப்படும் இட ஒதுக்கீடு முறையில் பிரச்னை ஏற்படும் என்பதும் தமிழகம் எதிர்ப்புத் தெரிவிக்க முக்கியக் காரணமாக இருந்தது. தமிழகத்தில் நுழைவுத் தேர்வு ஏதுமின்றி பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர், விக்ரம்ஜீத் சென் ஆகியோர் தங்கள் தீர்ப்பில் மேலும் தெரிவித்திருப்பது: அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை. இது தொடர்பான அவர்களின் அறிவிப்பு இந்திய அரசியல் சாசன சட்டப்பிரிவுகள் 19,25,26,29 மற்றும் 30 ஆகியவற்றை மீறுவதாக உள்ளது என்றனர்.

இதே அமர்வில் இடம் பெற்ற நீதிபதி ஏ.ஆர்.தேவ், "தலைமை நீதிபதி கபீர், நீதிபதி தேவ் ஆகியோரின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. தேசிய அளவில் தகுதித் தேர்வு நடத்துவது என்பது சட்டப்படியானது, நடைமுறைக்கு சாத்தியமானது மற்றும் சமூகத்துக்குத் தேவையானது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவுத் தேர்வை நடத்துவதன் மூலம் பணத்தை நோக்கமாகக் கொண்டு கல்வித் துறையில் செயல்படுபவர்களை கட்டுப்படுத்த முடியும்' என்று கூறியுள்ளார்.

எனினும் இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகளில் இருவர், பொது நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று கூறிவிட்டதால் அதுவே இறுதித் தீர்ப்பாக அமைந்தது.

முன்னதாக எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்தும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பை எதிர்த்து மொத்தம் 115 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஏற்கெனவே நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட விதித்திருந்த தடையை கடந்த மே 13-ல் உச்ச நீதிமன்றம் நீக்கி, மாணவர் சேர்க்கையைத் தொடர உத்தரவிட்டது.

இந்திய மருத்துவக் கவுன்சில், இந்திய பல் மருத்துவக் கவுன்சில், மருத்துவப் பல்கலைக்கழகங்கள், மாநில அரசுகள் மற்றும் பிற மருத்துவக் கல்வி நிறுவனங்கள் தங்களுக்கான நுழைவுத் தேர்வை தனித்தனியாக நடத்திக் கொள்ளலாம். ஆனால் மறு அறிவிப்பு வரும் வரை முடிவுகளை வெளியிடக் கூடாது என்று 2012 டிசம்பரில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் இருந்த அனைத்து வழக்குகளும் கடந்த ஜனவரி 15-ல் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

TRB PGT EXAM HALL TICKET DOWNLOAD | முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு 21–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. தங்கள் பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டுள்ள விண்ணப்பதார்கள் விண்ணப்ப எண்ணையும், ஏதாவது ஒரு பிறந்த தேதியையும் குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு 21–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 664 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 532 பேர் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்துவிட்டனர். 8 ஆயிரம் பேர் ஆன்லைனில் ஹால்டிக்கெட் எடுக்க முயற்சி மேற்கொண்டும் அதில் வெற்றிபெறவில்லை. 27,500 ஹால்டிக்கெட்டை எடுப்பதற்கான முயற்சிகூட செய்வில்லை. பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் தங்கள் பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டு உள்ளனர் (அதாவது எழுதி இருப்பது ஒன்று, ஷேடிங் செய்திருப்பது ஒன்று). அத்தகைய விண்ணப்பதார்களுக்கு உதவும் வகையில் ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்து எடுக்கும் முறை மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ( www.trb.tn.nic.in ) விண்ணப்ப எண்ணையும், ஏதாவது ஒரு பிறந்த தேதியையும் குறிப்பிட்டால் போதும். ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்து எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

2013-14ம் கல்வி ஆண்டில் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.

2013-14ம் கல்வி ஆண்டில் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப  பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதன் படி 

1 20.07.2013  சனிக்கிழமை  காலை 10மணி மாவட்டத்திற்குள்
2 22.07.2013  திங்கட்கிழமை காலை 10 மணி மாவட்டம் விட்டு மாவட்டம்

கலந்தாய்வு நடைபெறும்.

கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் :

1. 2013-14ம் கல்வியாண்டில் மே-2013ல் நடைபெற்ற ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் ஆணை பெற்றவர்கள் இந்த மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கு கண்டிப்பாக அனுமதிக்கப்படக்கூடாது.

2. 2013-14ம் கல்வியாண்டில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு பெண் ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படவேண்டும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில்  ஆண் ஆசிரியர்கள் மட்டுமே நியமனம் செய்யப்படவேண்டும். இருபாலர் பயிலும் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு பொது மாறுதல் விதிகளின்படி ஆண் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு மாறுதல் அளிக்கலாம் என அரசு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதனடிப்படையில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் மட்டும், ஆண்கள் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்கள் மட்டும் மற்றும் இருபாலர் பள்ளிகளில் இருபால் ஆசிரியர்களுக்கும் மாறுதல் வழங்கலாம்.

3. மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்கள் வழியாக 19.07.2013 மாலை 5 மணிக்குள் பெற்று அரசாணையில் தெரிவித்துள்ள நெறிமுறைகளின்படி முன்னுரிமையினை நிர்ணயம் செய்ய வேண்டும். புதியதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட மாறுதலுக்குப்பின் காலிப்பணியிடம் இருப்பின் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வை நடத்தலாம். மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்விற்கான விண்ணப்பங்களை கலந்தாய்வு அன்று தலைமையாசிரியர் ஒப்பத்துடன் ஆசிரியர்கள் அளித்தால் அதனைப் பெற்று முன்னுரிமை நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும்.

4. இந்த கலந்தாய்வு  புதியதாக தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

உத்தரகாண்ட் பேரழிவு மீட்பு பணியில் முத்திரை பதித்த சமோலி மாவட்ட கலெக்டர் முருகேசன்

சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் இந்திய மக்களின் இதயங்களை உலுக்கியதோடு உலக நாடுகளையும் அனுதாபப்பட வைத்தது. கங்கை நதிக்கரையில் சிவனையும், பத்ரிநாத் விஷ்ணுவையும் தரிசிக்க சென்ற ஆயிரக்கணக்கான உயிர்கள் மண்ணுக்குள் உயிரோடு புதைந்த அந்த ஜூன் 15ம்தேதி இந்திய சுற்றுலா வரலாற்றில் ஒரு கறுப்பு நாள். இயற்கை சில நேரம் மண்ணுக்கும், மனித உயிர்களுக்கும் ஏற்படுத்தும் இழப்பு என்றுமே ஈடு செய்ய முடியாத ஒன்றாகி விடுகிறது. இது போன்ற நேரங்களில் உயிருக்கு போராடுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது மனிதநேயமிக்க செயலாகும்.

அந்த வகையில் உத்தரகாண்ட் கோரத்திலிருந்து மீண்டு வந்த பல்லாயிரம் பேர் உச்சரித்த பெயர் முருகேசன். பத்ரிநாத், கேதார்நாத் கோயில்கள் அமைந்துள்ள சமோலி மாவட்ட கலெக்டர்தான் இந்த முருகேசன். மீட்பு பணிகளை முடுக்கிவிட்டு ஆயிரக்கணக்கான உயிரை காப்பாற்றிய 35 வயது இளைஞரான முருகேசன் ஒரு தமிழர். சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த செலவடை என்னும் குக்கிராமத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதாக சொந்த கிராமத்துக்கு வந்த முருகேசன், உலகை உலுக்கிய உத்தரகாண்ட் பேரழிவு குறித்து தினகரனுக்கு அளித்த சிறப்பு பேட்டி:பத்ரிநாத், கேதார்நாத்தில் இந்துக்கள் வழிபடும் சிவன், விஷ்ணு கோயில்களை போல, சீக்கியர்கள் வழிபடும் கேம்குன்சாகிம் கோயிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. இயற்கை சீற்றங்களுக்கு இங்கே எப்போதும் குறைவில்லை.

இப்படிப்பட்ட நிலையில்தான் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி, இரவு அந்த கோரச்சம்பவம் நடந்தது. நான் கலெக்டராக பொறுப்பேற்ற ஒரு ஆண்டு காலத்தில் நான் சந்தித்த மிகப்பெரிய சவாலான பணி இதுதான். கடும்புயல் மழை காரணமாக 15, 16ம் தேதிகளில் பேரிழிவு பகுதிக்கு செல்லவே முடியவில்லை. 17ம்தேதி அதிகாலை, பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டேன்.

கேதார்நாத்தில் நிகழ்ந்திருந்த பேரழிவும், சகதியில் சிக்கி புதைந்திருந்த உடல்களும் மனதை உலுக்கியது. முதல் மூன்று நாட்கள் உணவு, உடை, சுற்றுச்சூழல் என்று எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. குடும்பம், மனைவி, குழந்தை, உறவினர்கள் குறித்த சிந்தனை இல்லை. ஆபத்தில் சிக்கிக் கொண்டவன் தமிழனா, மலையாளியா? என்ற கணக்கீடும் இல்லை. அவர்களை மீட்டு மருத்துவ முகாமிற்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. 17ம் தேதி நாங்கள் மீட்பு பணியில் ஈடுபட்ட பின்பு ஒரு உயிர் கூட பலியாகவில்லை என்பதுதான், எங்களுக்கு ஆறுதல் அளித்த விஷயம்.

இதில் ராணுவம், விமானப்படை, எல்லை பாதுகாப்பு, தன்னார்வ தொண்டு அமைப்புகள் என ஒட்டு மொத்த கூட்டு முயற்சிதான் மிக விரைவாக நிவாரண பணிகள் நடப்பதற்கு காரணமாக அமைந்தது. சிகிச்சை முடிந்து ஊருக்கு புறப்பட்டு சென்றவர்கள், என்னைப்பற்றி விசாரித்து, எனது முகாமிற்கு வந்து ‘நன்றி’ என்று சொன்ன அந்த ஒற்றை வார்த்தை இந்த உலகத்தில் எதற்கும் ஈடாகாது. என்னுடைய கலெக்டர் வாழ்க்கையில் உத்தரகாண்ட் சம்பவம் நெஞ்சில் வடுவாக பதிந்து விட்டது. 

இது போல் ஒரு சம்பவம் இனி எப்போதும் நேர கூடாது. இயற்கை சீற்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான முயற்சிகளை இப்போது துவக்கியுள்ளோம். தற்போது மீட்பு பணிகள் பெரும்பகுதி முடிவடைந்து இயல்பு நிலை ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு முருகேசன் தெரிவித்தார்.

சேலம் அருகே செலவடை கிராமத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் முருகேசன். இவரது தந்தை ஆறுமுகம் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். அம்மா லட்சுமி, சகோதரர்கள் சண்முகம், சதீஷ்குமார் என்று விவசாயம் சார்ந்த குடும்பம். 

செலவடை ஊராட்சி ஒன்றிய பள்ளி, தாரமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளிகளில் படிப்பை முடித்து மதுரையில் பிஎஸ்சி விவசாயம் படித்தார். கடந்த 2005ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பணி ஒதுக்கீடு கிடைத்தது.  அதே ஆண்டில் உத்தரகாண்ட் நைனிடால் மாவட்ட வருவாய் அலுவலராக பணியில் சேர்ந்தார். பின்னர் பல்வேறு இடங்களில் பணியாற்றி கடந்த ஓராண்டுக்கு முன் 2012 மே 6ம்தேதி சமோலி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

மொழி ஆசிரியர்கள் (தமிழ், தெலுங்கு) தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற, பள்ளிக்கல்வித்துறை விதித்த கட்டுப்பாடுகளில் திருத்தம் செய்ய, பள்ளிக்கல்வி முதன்மைச் செயலருக்கு, பள்ளிக்கல்வி இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார்.

மொழி ஆசிரியர்கள் (தமிழ், தெலுங்கு) தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற, பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாடுகளை விதித்தது. இதை திருத்தம் செய்ய, பள்ளிக்கல்வி முதன்மைச் செயலருக்கு, பள்ளிக்கல்வி இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார்.

மொழி ஆசிரியர்கள், பி.எட்., பட்டம் பெறாமல், ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். பின், பி.எட்., பட்டம் பெறுகின்றனர். தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு, பி.எட்., பட்டம் பெற்ற நாளில் இருந்தே, பணி மூப்பு கணக்கிடப்படுகிறது. இதனால், அவர்களுக்குப்பின் பணியில் சேர்ந்தவர்கள், பதவி உயர்வில், தலைமை ஆசிரியர்களாகி விடுகின்றனர். இந்நடைமுறையை மாற்ற, தமிழாசிரியர் கழகம் சார்பில், வழக்கு தொடரப்பட்டது. இதன்படி, தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு, இடைக்கால தடை விதித்து, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல், நிலுவையில் கிடக்கிறது. இந்நிலையில், "பணியில் சேர்ந்த நாளில் இருந்தே, பணி மூப்பு கணக்கிடும் வகையில், பணி விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலருக்கு, பள்ளிக்கல்வி இயக்குநர்  பரிந்துரை செய்துள்ளார்.


எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கையை, மேலும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கையை, மேலும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: நாட்டில் உள்ள மக்கள் தொகைக்கேற்றபடி, டாக்டர்களின் எண்ணிக்கை இல்லை. எனவே, மக்கள் தொகைக்கேற்ப, டாக்டர்களின் விகிதாசாரத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, ஒட்டு மொத்தமாக, மேலும், 3,000 மாணவர்களை சேர்க்க, இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய அரசுக்கு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, 10 ஆண்டுகளாக, தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு கூடுதலாக, மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கப்படவுள்ளது. தற்போது, 50 எம்.பி.எஸ்., இடங்கள் உள்ள மருத்துவ கல்லூரிகளில், இந்த எண்ணிக்கையை, 100 ஆக அதிகரிக்கவும், 100 இடங்கள் உள்ள கல்லூரிகள், எண்ணிக்கையை, 150 ஆக அதிகரிக்கவும், அனுமதி அளிக்கப்படவுள்ளது. இம்மாத இறுதிக்குள், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, நாடு முழுவதும், 362 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 45,000 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. மத்திய அரசின் புதிய திட்டத்தின்படி, எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை, 48,000 ஆக அதிகரிக்கும். இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற ஆதி திராவிடர்–பழங்குடியினருக்கு பயிற்சி சிறந்த தனியார் நிறுவனங்கள் மூலம் அளிக்க தமிழக அரசு விசேஷ ஏற்பாடு

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறச்செய்யும் வகையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின ஆசிரியர்களுக்கு சிறந்த தனியார் நிறுவனங்கள் மூலம் விசேஷ பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இந்த உத்தரவு, தமிழகத்தில் 23.8.2010 முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும், சுயநிதி பள்ளிகளிலும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளில் நியமிக்க முடியும். தேர்வில் 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மார்க்) எடுத்தால், தேர்ச்சிபெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.

அரசு பள்ளிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் இரண்டுமுறை தகுதித்தேர்வை நடத்தியது. இரண்டிலும், ஆதி திராவிடர், பழங்குடியினர் வகுப்பினரின் மிகக்குறைவாக இருந்தது. மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போல தமிழகத்திலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதம் அல்லது 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால், தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டியுள்ளதால் தேர்ச்சி மதிப்பெண் ஒருபோதும் குறைக்கப்பட மாட்டாது என்று அரசு உறுதியாக கூறிவிட்டது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான காலி இடங்கள் அப்படியே இருக்கும் என்றும், தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றால் அவர்கள் பணியில் சேர்ந்துகொள்ளலாம் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆதி திராவிடர் வகுப்பினர், பழங்குடியினர், மதம்மாறிய ஆதி திராவிடர்கள் ஆகியோரை தகுதித்தேர்வில் வெற்றிபெறும் வகையில் அவர்களுக்கு சிறந்த தனியார் நிறுவனங்கள் மூலம் விசேஷ பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. எத்தனை ஆசிரியர்களுக்கு இந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்? பயிற்சி வகுப்புகள் எவ்வளவு காலம்? பயிற்சியின்போது உதவித்தொகை வழங்கலாமா? என்பது உள்ளிட்ட அம்சங்கள் விரைவில் முடிவு செய்யப்படும். இதற்கான பணிகளை ஆதி திராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மேற்கொண்டு வருகிறது.

11 புதிய அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 180 விரிவுரையாளர் பணி இடங்களுக்கு அனுமதி தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் 30 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 450–க்கும் மேற்பட்ட தனியார் பாலிடெனிக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இங்கு பல்வேறு என்ஜினீயரிங் பிரிவுகளில் 3 ஆண்டு கால பட்டயப் படிப்புகள் (டிப்ளமோ) வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு ஸ்ரீரங்கம், பெருந்துறை, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம், ஜோலார்பேட்டை, செய்யார் உள்பட 11 இடங்களில் புதிதாக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த கல்லூரிகளில் செய்யாறு கல்லூரி நீங்கலாக எஞ்சிய 10 கல்லூரிகளுக்கும் தலா 18 விரிவுரையாளர் பணி இடங்கள் வீதம் 180 விரிவுரையாளர் பணி அடங்களுக்கு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் உயர்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் அபூர்வ வர்மா பிறப்பித்து உள்ளார்.

மொத்தம் உள்ள காலி பணி இடங்களில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய என்ஜினீயரிங் சாரா பாடப்பிரிவுகளும் அடங்கும். இந்த காலி பணி இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக நேரடியாக நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வில், யு.ஜி.சி. நிர்ணயித்த தகுதியின்படி பணியாற்றிய முந்தைய காலத்தையும் விண்ணப்பதாரரின் பணி அனுபவமாக கருத வேண்டும் என்று தேர்வு வாரியத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வில், யு.ஜி.சி. நிர்ணயித்த தகுதியின்படி பணியாற்றிய முந்தைய காலத்தையும் விண்ணப்பதாரரின் பணி அனுபவமாக கருத வேண்டும் என்று தேர்வு வாரியத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் ஏ.சந்திரசேகரன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: 1983–ம் ஆண்டு எம்.காம். பட்டம் பெற்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற தனியார் கல்லூரியில் 1986–ம் ஆண்டு விரிவுரையாளராக சேர்ந்தேன். 1990–ல் எம்.பில். படிப்பையும், 2011–ல் பி.எச்.டி. படிப்பையும் முடித்தேன்.  சமீபத்தில், அரசு கல்லூரிகளில் உள்ள உதவிப்பேராசிரியருக்கான ஆயிரத்து 93 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியையும் அதில் வாரியம் வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில், பி.எச்.டி படித்தவருக்கு 9 மார்க், எம்.பில். படித்து ஸ்லெட் அல்லது நெட் பாஸ் செய்திருந்தால் 6 மார்க், முதுநிலை பட்டம் படித்து அதனோடு ஸ்லெட் அல்லது நெட் பாஸ் செய்திருந்தால் 5 மார்க், நேர்முக தேர்வில் 10 மார்க் என்று கூறப்பட்டு இருந்தது.

 முதுநிலைப் படிப்பில் 55 சதவீத மார்க் மற்றும் ஸ்லெட் அல்லது நெட் அல்லது பி.எச்.டி. என்ற தகுதி பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் தொடர்பான அறிவிப்பில், ஏற்கனவே கல்லூரி ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருந்தால் ஒவ்வொரு ஆண்டுக்கும் 2 மார்க், வீதம் அதிகபட்சம் 15 மார்க் அளிப்பதாக கூறப்பட்டு இருந்தது.

பின்னர் அந்த அறிவிப்பு திருத்தப்பட்டு, 19.6.13 அன்று மற்றொரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் பி.எச்.டி. படிப்போ, எம்.பில். அல்லது முதுநிலைப் படிப்போ எதுவாக இருந்தாலும், அந்தக் கல்வியை முடித்து, அதன் பின்னர் கல்லூரி ஆசிரியராகச் சேர்ந்து இதுவரை பெற்றுள்ள ஆசிரியர் பணி அனுபவத்துக்கு மட்டுமே மார்க் தரப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.  இது என்னைப் போன்றவர்களை பாதிக்கும். நான் கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்த நாளில் இருந்து எனது பணி அனுபவத்தை கணக்கில் கொண்டு மார்க் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதி டி.அரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் பி.ரவி ஆஜரானார். அவர், ‘‘மனுதாரர் பணியில் சேர்ந்த 1986ம் ஆண்டில், முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதே விரிவுரையாளர் பணிக்கான குறைந்தபட்ச தகுதி என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதுதான் அப்போதய பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி. )விதி.

யு.ஜி.சி. விதிமுறைகளின்படி விரிவுரையாளராகப் பணியாற்றி, சம்பளமும் பெற்றிருப்பதால், மனுதாரரின் பணி அனுபவத்தை அந்த ஆண்டிலிருந்தே கணக்கிட வேண்டும்’’ என்று வாதிட்டார். ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வக்கீல் பி.சஞ்சய் காந்தி ஆஜரானார். அவர், ‘‘பி.எச்.டி. அல்லது எம்.பில். அல்லது முதுநிலைக் கல்வித் தகுதி பெற்றதற்கு பின்னர் கிடைத்துள்ள பணி அனுபவம்தான் கணக்கிடப்படும் என்ற திருத்தம் விலக்கிக் கொள்ளப்படுகிறது’’ என்று வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:யு.ஜி.சி. விதிமுறையின்படி பணியாற்றிய காலம் அனைத்தையுமே அவரின் பணி அனுபவமாக கருத வேண்டும். இதை எளிதாக விளங்கிக் கொள்ளும் வகையில், எந்தெந்த காலகட்டத்தில் எந்தெந்த தகுதி யு.ஜி.சி.யால் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது என்பதை விளம்பரமாக வெளியிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த 1.68 லட்சம் பேரில் இதுவரை 1.05 லட்சம் பேர் மட்டுமே, "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்துள்ளனர். மற்றவர்கள் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என டி.ஆர்.பி., வலியுறுத்தி உள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த 1.68 லட்சம் பேரில் இதுவரை 1.05 லட்சம் பேர் மட்டுமே, "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்துள்ளனர். மற்றவர்கள் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என டி.ஆர்.பி., வலியுறுத்தி உள்ளது. டி.ஆர்.பி., அதிகாரிகள் கூறியதாவது: வரும், 21ம் தேதி, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, போட்டித் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு, 1.68 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான, "ஹால் டிக்கெட்', http://111.118.182.232/PG2013/ என்ற டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதுவரை, 1.05 லட்சம் பேர் மட்டுமே, தங்களின், "ஹால் டிக்கெட்'டுகளை, பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்னும், 63 ஆயிரம் பேர், பதிவிறக்கம் செய்யவில்லை. தேர்வு தேதி நெருங்கி வருவதால், அனைவரும், உடனடியாக, "ஹால் டிக்கெட்'டுகளை, பதிவிறக்கம் செய்ய வேண்டும். தேர்வு நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம் என, நினைத்தால், தேவையில்லாமல் பதற்றம் ஏற்படும். இதை தவிர்க்க, உடனடியாக, "ஹால் டிக்கெட்'டுகளை, பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்ப எண்களையும், பிறந்த தேதியையும், சரியாக பதிவு செய்து, "சப்மிட்' கொடுத்தால், "ஹால் டிக்கெட்' கிடைக்கும். அனைத்து தேர்வர்களுக்கும், "ஹால் டிக்கெட்' வெளியிட்டுள்ளோம். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடப்பு கல்வி ஆண்டில், புதிதாக, 100 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன.

"சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரமாக இல்லை' என, ஒரு சாரார் குறை கூறிக்கொண்டிருக்கும் நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், புதிதாக, 100 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன.

முந்தைய, தி.மு.க., ஆட்சியில், சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பாடத்திட்டம் வலுப்படுத்தப்பட்டு, அனைத்து வகுப்புகளுக்கும் அமல்படுத்தப்பட்டன. எனினும், "சமச்சீர் கல்வி பாடத்திட்டம், முந்தைய மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பாடத் திட்டங்களுக்கு நிகராக இல்லை. தற்போதைய பாடத் திட்டத்தை, மேலும் மேம்படுத்த வேண்டும்' என, தனியார் பள்ளிகள் தரப்பில் வலியுறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அதிகளவில் துவங்கப்பட்டு வருவதையும், தனியார் பள்ளி நிர்வாகிகள் கோடிட்டு காட்டுகின்றனர். கடந்த, இரண்டு ஆண்டுகளில், 200 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. சராசரியாக, ஆண்டுக்கு, 50 பள்ளிகள் முதல், 75 சி.பி.எஸ்.இ., பள்ளிகள், புதிதாக துவங்கப்பட்டு உள்ளன.

சமச்சீர் கல்வி பாடத்திட்டம் வலுவாக இல்லாததால் தான், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் எண்ணிக்கை, அதிகரித்து உள்ளன என்றும், மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் கூறுகின்றனர். ஆனால், நடப்பு கல்வி ஆண்டில், 100 மெட்ரிகுலேஷன் பள்ளிகள், எட்டாம் வகுப்பு வரை செயல்பட, அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக, மெட்ரிக் இயக்குனரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது, சமச்சீர் கல்வி பாடத்திட்டம், தரமாக இல்லை என்ற, தனியார் பள்ளி நிர்வாகிகளின் வாதம் எடுபடவில்லை என்பதையே காட்டுகிறது. தமிழகத்தில், தற்போது, 3,737 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை, அடுத்த, மூன்று ஆண்டுகளில், 4,000த்தை தாண்டிவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


இது குறித்து, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர், பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: சமச்சீர் கல்வித் திட்டம், தரமாக உள்ளது. அதில், எவ்வித சந்தேகமும் இல்லை. கல்வி வியாபாரம் செய்பவர்கள் தான், இந்த திட்டத்தை குறை கூறுகின்றனர். தற்போதைய பாடத் திட்டத்தை, மேலும் வலுப்படுத்தினால், இன்னும் சிறப்பாக இருக்கும் என்றுகூறுகிறோம். சி.பி.எஸ்.இ., பள்ளியை துவங்க வேண்டும் எனில், பல லட்சம் ரூபாயை செலவழிக்க வேண்டும். ஆனால், மெட்ரிக் பள்ளியை, சில லட்சம் ரூபாய் செலவில், துவங்கி விடலாம். அதனால், மெட்ரிக் பள்ளியை துவங்குகின்றனர். ஆனாலும், காலப்போக்கில், மெட்ரிக் பள்ளியை, அப்படியே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளாக மாற்றி விடுகின்றனர். இப்படி, பல பள்ளிகள் மாறியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகையில், "சமச்சீர் பாடத்திட்டத்தில் குறை இருந்தால், எப்படி, இவ்வளவு பள்ளிகளை, புதிதாக ஆரம்பிப்பர்? எனவே, பாடத்திட்டத்தில் குறை என்று கூறுவது எல்லாம் பொய். பாடத்திட்டம், தரமாகவே உள்ளது. வரும் ஆண்டுகளில், பாடத்திட்டத்தின் தரம், மேலும் உயரும்' என, தெரிவித்தன.

பிரின்ஸ் கஜேந்திரபாபு குறிப்பிட்டதாவது: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர், நந்தகுமார், மாவட்ட அளவில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், முதல், மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள், பிளஸ் 1 சேர்வதற்காக, தனியார் பள்ளிகளுக்குச் செல்வதை, தடுத்து நிறுத்தி உள்ளார். சம்பந்தப்பட்ட மாணவர்களை, அரசு பள்ளிகளிலேயே, பிளஸ் 1 சேர வைத்து, அவர்களுக்கு, மாவட்ட அளவில் உள்ள சிறந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு, பாடம் நடத்த, ஏற்பாடு செய்துள்ளார். மேலும், மூன்று மாணவர்களுக்கும்,சாப்பாடு, அவர்கள், பள்ளிக்குச் சென்று வர, போக்குவரத்து வசதி என, அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, மாணவர்கள், தனியார் பள்ளிகளுக்குச் செல்வதை தடுத்து நிறுத்தி உள்ளார்; இது, வரவேற்கக் கூடியது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

பொதுவாக, அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு தேர்வில், அதிக மதிப்பெண்களை பெறும் மாணவ, மாணவியரிடம், "இலவசமாக, தரமான கல்வி தருகிறோம்' எனக் கூறி, அப்படியே, தனியார் பள்ளி நிர்வாகிகள், அழைத்துச் சென்றுவிடுவர். நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களை, மேலும் மெருகேற்றி, மாநில அளவில், "ரேங்க்' பெற வைத்து, பள்ளியை, விளம்பரப்படுத்தி விடுகின்றனர். இதற்கு, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர், "செக்' வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே பாணியை, மற்ற மாவட்ட கலெக்டர்களும் பின்பற்றினால், வரும் ஆண்டுகளில், பொதுத் தேர்வுகளில், மாநில அளவில், பல்வேறு இடங்களை, அரசு பள்ளி மாணவர்களே பிடிப்பர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் மனுதாரர் மாற்றுத்திறனாளி என்றாலும் 90 மார்க் எடுத்து தேர்ச்சி பெற்ற பிறகு தான், ஆசிரியர் பணி நியமனத்தில் அவர் 3 சதவீத இட ஒதுக்கீட்டை கோர முடியும் என சென்னை ஐகோர்ட் உத்தரவு.

ஆசிரியர் தகுதித் தேர்வில் மனுதாரர் மாற்றுத்திறனாளி என்றாலும் எவ்வித இட ஒதுக்கீட்டையும் கோர முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  சென்னை ஐகோர்ட்டில் நாகை மாவட்டம் தெற்கு மருதூரைச் சேர்ந்த கே.குமாரவேலு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

எனது தந்தை விவசாயக் கூலி. 2009–ம் ஆண்டு ஆசிரியர் கல்வியில் டிப்ளமோ படித்த நான் நாகை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் எனது பெயரை பதிவு செய்துள்ளேன். 1992–ம் ஆண்டு ஒரு பஸ் விபத்தில் எனது வலது கால் துண்டிக்கப்பட்டது. எனக்கு 60 சதவீத ஊனம் ஏற்பட்டிருப்பதாக மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக சுகாதார நலத்துறை சான்றிதழ் வழங்கி உள்ளது. அதற்கான ஒதுக்கீட்டின்படி நான் வேலைக்கு விண்ணப்பித்து உள்ளேன்.

இந்த நிலையில், தமிழக அரசு அறிவித்த ஆசிரியர் தகுதித் தேர்வை (டி.இ.டி.) எழுதி 83 மார்க் எடுத்தேன். (90 மதிப்பெண் எடுத்தால் பாஸ்). இந்த நிலையில் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வேலை அளிப்பதாக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து நானும் எனக்கு இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன். அரசின் மாற்றுத் திறனாளிகள் சட்டத்தின்படி, அவர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். அதன்படி, 360 மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால் இதுவரை அந்த இடஒதுக்கீட்டின்படி யாருக்கும் வேலை அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது.

ஆனால் 3 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் எனக்கு நிச்சயம் வேலை கிடைக்கும். இதுதொடர்பாக முதல்–அமைச்சர் பிரிவுக்கு மனு கொடுத்தேன். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரையும் சந்தித்து மனு கொடுத்தேன். ஆனால் 90 மார்க் எடுத்தால் மட்டுமே பணி நியமனம் குறித்து பரிசீலிப்பதாக அவர் கூறினார். ஆனாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் மற்றும் அரசாணை குறித்து நான் கேட்ட விளக்கங்களை அதிகாரிகள் அளிக்கவில்லை. இதனால் சமவாய்ப்பு அளிக்கும் அரசியல் சாசனம் மீறப்படுகிறது. எனவே நான் கொடுத்த விண்ணப்ப மனுவின் அடிப்படையில் எனக்கு மாற்றுத் திறனாளி அடிப்படையில் முன்னுரிமை அளித்து, பணி நியமன ஆணை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

3 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில், தகுதிக்கான மார்க்கில் சலுகை அளித்து தனக்கு இடைநிலை ஆசிரியர் பதவி வழங்க வேண்டும் என்று மனுதாரர் கூறியுள்ளார்.இதற்கு பதிலளித்த அரசு வக்கீல் சஞ்சய் காந்தி, ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தகுதியில் யாரும் சலுகை கோர முடியாது. இது போட்டித் தேர்வு அல்ல. ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்புக்கு இணையான தேர்வு அது. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உள்பட எந்த பிரிவினரும் பட்டயப்படிப்பில் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி அடைய முடியும். அதுபோலத்தான் ஆசிரியர் தகுதித் தேர்விலும் குறைந்தபட்சம் 90 மார்க் எடுக்க வேண்டும் என்று வாதிட்டார்.

90 மார்க் எடுத்து தேர்ச்சி பெற்ற பிறகு வேண்டுமானால், இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் அவர் 3 சதவீத இட ஒதுக்கீட்டை கோரலாம். ஆசிரியர் தகுதித் தேர்வு, குழந்தைகளுக்கு கல்வியை அளிக்கக்கூடிய ஆசிரியருக்கான தகுதியை நிர்ணயிக்கும் தேர்வு. அதில், 90 மார்க் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண், மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை பெற முடியாமல் செய்து விட்டது என்று கூற முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட டி.எஸ்.பி.க்கள் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் குரூப்–1 தேர்வு மூலம் கடந்த 2010–2011–ம் ஆண்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 28 துணை போலீஸ் சூப்பிரண்டுகளின்(டி.எஸ்.பி.க்கள்) பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.  பட்டியலில் பாலாஜி, மணிகண்டன்,ஜெயச்சந்திரன், குத்தாலிங்கம், விஜயகுமார், கார்த்திகேயன், சங்கா, இன்னொரு கார்த்திகேயன், கார்த்திக், இனிகோதிவ்யன், சதீஷ்குமார், அசோக்குமார், அருண், தேவநாதன், முத்துக்குமார், ஈஸ்வரன், சாமுவேல்பால், கோமதி, வேல்முருகன், முத்தமிழ், ரமேஷ்கிருஷ்ணன், விஷ்ணுபிரியா, கீதா, மகேஷ்வரி, மீனாட்சி, ஜரீனாபேகம், ராஜேஸ்வரி, கனகேஸ்வரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.இவர்கள் அனைவரும் வருகிற 2.8.2013 அன்று சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் எத்தனை பேர்? தகவல் தெரிவிக்க மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 23.8.2010–க்கு பின்னர், தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை உடனடியாக தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை அனைத்து ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 23.8.2010 முதல் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. எனினும் தகுதித்தேர்வு அமலுக்கு வருவதற்கு முன்பாக நியமன பணிகளை மேற்கொண்டிருந்தால் அத்தகைய ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

தகுதித்தேர்வு 23.8.2010 முதல் நடைமுறைக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டாலும் தமிழகத்தில் முதல் தகுதித்தேர்வே கடந்த 2012 ஆண்டுதான் நடத்தப்பட்டது. நிலைமை இவ்வாறு இருக்கும்போது 2010–ம் ஆண்டில் தகுதித்தேர்வில் ஒருவர் எப்படி தேர்ச்சி பெற முடியும்? என்பது ஆசிரியர்கள் பலரின் கேள்வி.

ஆசிரியர் தகுதித்தேர்வில் யாருக்கு விதிவிலக்கு? ஏற்கனவே தகுதித்தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டுமா? அல்லது இந்த 5 ஆண்டு காலஅவகாசம் சுயநிதி தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கா? என்பதில் எல்லாம் ஏராளமான குளறுபடிகள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில், அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் (சிறுபான்மை பள்ளிகள் உள்பட) 23.8.2010–க்கு பின்னர், தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் எத்தனை பேர்? என்பது குறித்து உடனடியாக தகவல் அனுப்புமாறு அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு அனுப்பப்பட்டது.

மாநில தொடக்க கல்வி இயக்குனர் வி.சி.ராமேசுவர முருகனின் இந்த உத்தரவை தொடர்ந்து இதுபற்றிய விவர பட்டியலை அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளும் இ–மெயில் மூலமாக அனுப்பினார்கள். இந்த பட்டியலை ஆய்வு செய்து அதில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாமா? அல்லது தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு குறிப்பிட்ட காலஅவகாசம் கொடுக்கலாமா? என்பது குறித்து அரசு இறுதி முடிவு எடுக்கும்.

பள்ளி மாணவர்களுக்கு கற்றல் குறைபாடை கண்டறிய விரைவில் பரிசோதனை அனைவருக்கும் கல்வி இயக்ககம் ஏற்பாடு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 2–ம் வகுப்பு, 6–ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சீயா) பரிசோதனை விரைவில் நடத்தப்பட உள்ளது.

ஆங்கிலத்தில் ‘டிஸ்லெக்சீயா’ என்று அழைக்கப்படும் கற்றல் குறைபாடு என்பது குறைபாடு ஆகும். பாதிக்கப்பட்ட குழந்தைகள் வார்த்தைகளை எழுத்துக்கூட்டி படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் சிரமப்படுவார்கள். சிலருக்கு கவனிப்பதில் சிரமம் இருக்கும். பாடங்களை மெதுவாக படித்து புரிந்துகொள்வார்கள். வார்த்தையை தப்பாக படிப்பார்கள். ஆனால், டிஸ்லெக்சீயா என்பது ஒரு நோய் அல்ல. சாதாரண ஒரு குறைபாடு. அவ்வளவுதான். இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2–ம் வகுப்பு மற்றும் 6–ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு உள்ளதாக என்பதை கண்டறிய விரைவில் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்குனர், அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு (எஸ்.எஸ்.ஏ.) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

கற்றல் குறைபாடு பாதிப்பை கண்டுபிடிப்பதற்கான முதல்நிலை பரிசோதனை 2–ம் வகுப்பு, 6–ம் வகுப்பு குழந்தைகளுக்கு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட குழந்தைகளை பற்றிய முழு விவரத்தையும் அதற்குரிய படிவத்தில் சேகரிக்க வேண்டும். அதில், குழந்தையின் பெயர், பிறந்த தேதி, குடும்ப பொருளாதார நிலை, அக்குழந்தையால் வகுப்பில் ஏற்படும் பிரச்சினைகள், பாடங்களில் பெற்ற மதிப்பெண், பேச்சுத்திறன், உற்றுநோக்குதிறன், பார்வை முறை, குடும்பத்தில் வேறு யாருக்கும் இந்த பாதிப்பு இருந்ததா? போன்ற விவரங்கள் அதில் இடம்பெற வேண்டும். இவ்வாறு பெறப்பட்ட தகவலை 19–ந்தேதி எஸ்.எஸ்.ஏ. மாநில திட்ட இயக்குனரகத்திற்கு இ–மெயில் மூலம் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றதும் கற்றல் குறைபாடு பாதிப்புள்ள குழந்தைகளுக்கு நிபுணர்கள் மூலம் பரிசோதனை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. வரலாற்றில் முதல்முறை: அரசு பணியில் 5,566 காலி பணி இடங்களை நிரப்ப நடத்தப்பட உள்ள குரூப்–4 தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.

அரசு பணியில் 5,566 காலி பணி இடங்களை நிரப்ப நடத்தப்பட உள்ள குரூப்–4 தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பதவிகளில் 5,566 காலி பணி இடங்களை நிரப்ப கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தோம். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று (நேற்று) கடைசி நாள். நள்ளிரவு 11.59 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

இன்று (நேற்று) மாலை 4 மணி நிலவரப்படி, 16 லட்சத்து 13 ஆயிரத்து 396 பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் இருப்பதால் இன்னும் விண்ணப்பங்கள் வரக்கூடும். இதற்கான எழுத்துத்தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25–ந்தேதி தமிழகம் முழுவதும் 240 மையங்களில் நடைபெற உள்ளது.

5,566 காலி இடங்களுக்கு 16 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருப்பதால் இந்த தேர்வில் கடும் போட்டி இருக்கும். குரூப்–4 தேர்வு, நேர்மையாகவும், முறையாகவும், தவறு இன்றியும் நடத்தப்படும் என்ற உறுதியை தேர்வர்களுக்கு அளிக்கிறோம். எனவே, யாரும் அச்சடப்படத் தேவையில்லை. சிபாரிசுக்காக யாரையும் அணுக வேண்டாம். கடுமையாக முயற்சி செய்து படித்தால் வெற்றிபெறலாம். முதல்–அமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட பெருமுயற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் அரசு பணியில் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீடு குரூப்–4 பணிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும். பதற்றம் மற்றும் சட்ட ஒழுங்கு பாதிக்கும் அபாயம் உள்ள தேர்வு மையங்களில், தேர்வு பணி வீடியோவில் பதிவுசெய்யப்பட்டு கண்காணிக்கப்படும்.

குரூப்–1 முதல்நிலை தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு விரைவில் மெயின் தேர்வு நடத்தப்படும். குருப்–2 பணிகளுக்கு துறைவாரியாக காலி இடங்களை பெற்று வருகிறோம். அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும். ஆன்லைனில் நடத்தப்படும் தேர்வுகளுக்கு முடிவுகளை விரைந்து வெளியிட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நவநீதகிருஷ்ணன் கூறினார். பேட்டியின்போது டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் உடனிருந்தனர்.

அரசு பணிக்கான தேர்வு ஒன்றுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பது டி.என்.பி.எஸ்.சி. வரலாற்றிலேயே இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு நடத்தப்பட்ட குரூப்–4, வி.ஏ.ஓ. தேர்வுகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். நள்ளிரவு 11.59 மணி வரையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்பதால், இன்னும் 50 ஆயிரம் பேர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். எனவே, விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 16½ லட்சத்தை தாண்டிவிடும்.

கர்ம வீரர் காமராஜரின் பிறந்த தினமான ஜூலை 15 "கல்வி வளர்ச்சி தினமாக' கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது .


kamarajar
தமிழகத்தின் மறைந்த முதல்வரான காமராஜரின், பிறந்த தினமான இன்று, "கல்வி வளர்ச்சி தினமாக' கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தொண்டு, தூய்மை, எளிமை, தியாகம், நாட்டுப்பற்று ஆகிய பண்பு நலன்களுக்கும் மனிதவடிவம் கொடுத்தால் அது நிச்சயம் காமராஜராகத் தான் காட்சியளிக்கும் என்று தலைவர்களால் புகழப்பட்டவர். 

காமராஜர் 1903ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி, விருதுநகரில் பிறந்தார். சுதந்திர போராட்ட வீரரும், சிறந்த பேச்சாளருமான சத்தியமூர்த்தியை, அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டவர். 1930ல் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்புச்சத்யாகிரகம் நடைபெற்ற போது காமராஜரும் கலந்து கொண்டார். இதற்காக சிறைக்கும் சென்றார். 1936ல் காங்., கட்சியின் செயலளராக நியமிக்கப்பட்டார். 1940ல், சிறையிலிருக்கும் போதே, விருதுநகர் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946-52 வரை சென்னை மாகாண காங்., தலைவராக இருந்தார். 1954ல், பதவியேற்ற இவர் 9 ஆண்டுகள் இப்பதவியில் இருந்தார். இவரது ஆட்சியின் போது கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஏழை, எளிய மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில், இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில், மத்திய அரசின் பல பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.

கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளைஞர் களிடம் கொடுத்து விட்டு, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற இவரது கொள்கையை பிரதமர் நேரு, காங்கிரஸ் கட்சி அளவில் செயல்படுத்த விரும்பினார். அது "கே- பிளான்' என்ற சிறப்பினைப் பெற்றது. இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு, தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றவராக விளங்கினார். இவரது வாழ்க்கையை எடுத்துரைக்கும் விதத்தில் "காமராஜர்' என்ற திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது.

காமராஜர் மாற்றுக்கட்சி தலைவர்களும் பாராட்டும் தலைவராக விளங்கினார். காமராஜரையும், காங்கிரசையும் கடுமையாகத் தாக்கிய ஈ.வே.ரா.,"பச்சைத்தமிழன்' என காமராஜரைப் பாராட்டினார். காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைமையையும் துவக்க காலத்தில் கடுமையாக விமர்சனம் செய்த எம்.ஜிஆர், பின், காமராஜர் என் தலைவர் என்று பகிரங்கமாக அறிவித்தார். அதுமட்டுமன்று மதுரை பல்கலைக்கழகத்திற்கு காமராஜர் பெயரை சூட்டினார். 

காந்தியடிகளின் அகிம்சை, சத்தியம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டு தியாக உணர்வுடன், தேசப்பணியில் ஈடுபட்ட காமராஜர், 1975 அக்.2ல், காந்தி பிறந்த தினத்தில், மறைந்தார். மறைந்த போது, இவரிடம் சிறிதளவு பணம் மட்டுமே இருந்தது. வங்கிக் கணக்கோ, சொத்தோ அவர் பெயரில் இல்லை. இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார். இவரது சேவைகளை பாராட்டி, மறைவுக்குபின் 1976ல், நாட்டின் மிக உயரிய "பாரத ரத்னா' விருது காமராஜருக்கு வழங்கப்பட்டது.புனிதமான, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த காமராஜருக்கு மக்கள், படிக்காத மேதை, ஏழைப்பங்காளன், கர்ம வீரர், தென்னாட்டு காந்தி, கிங் மேக்கர், பெருந்தலைவர் என்ற பட்டங்களை சூட்டி அவரை போற்றி வருகின்றனர்.