பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 20 சதவிகித தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 20 சதவிகித தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உழைக்கும் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 20 சதவிகித தீபாவளி போனஸ் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கும் 10 சதவிகித போனசும், லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களின் தொழிலாளர்களுக்கு 20 சதவிகித போனசும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவற்றின் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 10 சதவிகிதமும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவிகித போனசும் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகியவற்றில் பணியுரியும் ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்கள், போனஸ் சட்டத்தின் கீழ் வராத மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் தொழிலாளர்கள் ஆகியோருக்கு 1500 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 1200 ரூபாயும் தீபாவளி போனசாக வழங்கப்படும் என்று முதலமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||