செப்டம்பர் மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகளின் முடிவுகள் இணைய தளத்தில் வெளியாகாது என்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகளின் முடிவுகள் இணைய தளத்தில் வெளியாகாது என்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தனியாக படித்தவர்கள், பெயிலானவர்கள் எழுதிய செப்டம்பர் மாத எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்–2 தேர்வுகளின் முடிவு மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வழங்கப்படுகிறது. செப்டம்பர் மாத பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் படித்து பெயிலானவர்கள், பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் படித்து தேர்வு எழுதுவோர் வருடத்திற்கு 2 முறை தேர்வு எழுதலாம். செப்டம்பர், அக்டோபர் மாதம் அல்லது மார்ச் மாதம் தேர்வு எழுத முடியும். அவ்வாறு கடந்த செப்டம்பர் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 48 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதினார்கள். பிளஸ்–2 தேர்வை 41 ஆயிரம் பேர் எழுதினார்கள்.

 இந்த முறை பிளஸ்–2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. முதல் முதலாக மாணவ–மாணவிகளின் விடைத்தாளில் ரகசிய கோடு கொடுக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. இதனால் மாணவர்களின் விடைத்தாள்களை யாரும் பின்தொடர்ந்து மோசடி வேலையில் ஈடுபட முடியாது. இந்த முறைதான் வருகிற மார்ச் மாத தேர்விலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் நடந்த தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. மாறாக அந்த மாணவர்களின் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகளின் முடிவு மற்றும் சான்றிதழ்கள் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் (வெள்ளிக்கிழமை) முதல் வழங்கப்படுகிறது. இது 30–ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த வருடம் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டதால் கடந்த வருடத்தை விட விரைவில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அனுப்பி வைக்கப்படும் சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பித்து தேர்வு எழுதியவர்களுக்கு பதிவு தபாலில் அனுப்பப்படுகிறது. விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றிற்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||