தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டின் கீழ், 75 இடங்கள் நிரப்புவதற்கான கவுன்சலிங், வரும், 18ம் தேதி நடக்கும் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டின் கீழ், 75 இடங்கள் நிரப்புவதற்கான கவுன்சலிங், வரும், 18ம் தேதி நடக்கும் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும், 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் அரசு ஒதுக்கீட்டுக்கான கவுன்சலிங் முடிந்து, வகுப்புகள் துவங்கிவிட்டன. மொத்தம், 4,115 பேர் முதலாம் ஆண்டு, எம்.பி.பி.எஸ்., படிப்பைத் துவங்கியுள்ளனர். இந்த நிலையில், சென்னை தண்டலம் பகுதியில், மாதா மருத்துவ சுய நிதி கல்லூரிக்கு, இந்திய மருத்துவக் கவுன்சில் சில தினங்களுக்கு முன் அனுமதி அளித்தது. இதன்படி, இந்த கல்லூரியில், 150 இடங்கள் உள்ளன. இதில், 50 சதவீத மாநில அரசுக்கான இட ஒதுக்கீட்டின்கீழ், 75 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங், வரும், 18ம் தேதி,சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் துவங்குகிறது. இதற்கான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதுப்பற்றிய விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என, மருத்துவ கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.

Comments