ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தேர்வுநிலை அந்தஸ்தை, ஏழு ஆண்டுகளுக்குப் பின், ரத்து செய்தது செல்லாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தேர்வுநிலை அந்தஸ்தை, ஏழு ஆண்டுகளுக்குப் பின், ரத்து செய்தது செல்லாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இடைநிலை ஆசிரியராகபொள்ளாச்சி அருகில், நல்லம்பள்ளியில், அரசு உதவி பெறும் பள்ளியில், கடந்த 1989ல், இடைநிலை ஆசிரியராக, சுரேஷ் பாபு என்பவர் நியமிக்கப்பட்டார். கடந்த 1997ல், சிங்காநல்லுாரில் உள்ள, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நியமிக்கப்பட்டார். அதற்கு முன், அரசு உதவி பெறும் பள்ளியில் வகித்து வந்த ஆசிரியர் பணியை, ராஜினாமா செய்தார். அந்த இடத்தில், வேறு ஒரு ஆசிரியை நியமிக்கப்பட்டு, அதற்கு கல்வி அதிகாரியும் ஒப்புதல் வழங்கினார்.இதையடுத்து, ஏற்கனவே அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றிய காலத்தையும் கணக்கில் கொண்டு, 1999ல், சுரேஷ் பாபுவுக்கு, தேர்வு நிலை அந்தஸ்து வழங்கப்பட்டது.

இதை ரத்து செய்து, பொள்ளாச்சியில் உள்ள, உதவி தொடக்க கல்வி அதிகாரி உத்தரவிட்டார். ஒப்புதல் அளிக்கவில்லைஅரசு உதவி பெறும் பள்ளியில், பணியை ராஜினாமா செய்ததற்கு, கோவையில் உள்ள, மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் அரசு உதவி பெறும் பள்ளியின் பணி நாட்களை கணக்கில் கொண்டதற்கு, தணிக்கைத் துறை ஆட்சேபித்துள்ளது என்றும், காரணம் கூறப்பட்டது.தொடக்க கல்வி அதிகாரியின் உத்தரவை, ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் சுரேஷ் பாபு மனுத் தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் என்.அரிகரன் ஆஜரானார்.உதவி தொடக்க கல்வி அதிகாரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அரசு உதவி பெறும் பள்ளியில் நியமிக்கப்பட்ட பின், வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்ததை ரத்து செய்யவில்லை; கல்வித் துறையை ஏமாற்றி, ஊராட்சி ஒன்றிய பள்ளியில், பணி நியமனம் பெற்றுள்ளார். அதனால், மாவட்ட கல்வி அதிகாரி, ராஜினாமாவை ஏற்கவில்லை என, கூறப்பட்டு உள்ளது.ஏமாற்றி பெற்றார்மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:ஊராட்சி ஒன்றிய பள்ளியில், சுரேஷ் பாபு நியமனம் பெற்றதை, அவர் ஏமாற்றி பெற்றார் என, உதவி தொடக்க கல்வி அதிகாரி எப்படி கூறுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் உள்ளிட்ட அரசு பள்ளிகளில் நியமனம் பெற உரிமை உள்ளது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேர்வுநிலை அந்தஸ்து வழங்குவதற்கு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆற்றிய பணி நாட்களையும், கணக்கிட வேண்டும் என, கடந்த 1979ல், கல்வித் துறை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த அரசாணையை, அதிகாரிகள் கணக்கில் கொள்ளவில்லை.எனவே, வழங்கப்பட்ட தேர்வுநிலை அந்தஸ்தை ரத்து செய்வதற்கு, எந்த காரணமும் இல்லை. அதுவும், ஏழு ஆண்டுகளுக்குப் பின், நோட்டீஸ் எதுவும் கொடுக்காமல், தேர்வுநிலை அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது.உதவி தொடக்கக் கல்வி அதிகாரியின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே, தொகை பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், நான்கு வாரங்களில் அதை திருப்பிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டு உள்ளார்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||