கல்லூரி ஆசிரியருக்கான யு.ஜி.சி.,யின் தேசிய அளவிலான தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் 47 மையங்களில் நடைபெற்றது

கல்லூரி ஆசிரியருக்கான தேசிய அளவிலான தகுதி தேர்வு, தமிழகம் முழுவதும் 47 மையங்களில் நடைபெற்றது.

யு.ஜி.சி. என்று அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக்குழு சார்பில், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியருக்கான தகுதியை ஏற்படுத்தும், தேசிய அளவிலான தகுதித்தேர்வு(NET) நேற்று நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் தான், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த தேர்வு சென்னையில் 13 மையங்கள், மதுரையில் 15 மையங்கள், திருச்சியில் 10 மையங்கள், கோவையில் 9 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 47 மையங்களில் நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் நடைபெற்ற இந்த தேர்வை 6 லட்சம் முதுநிலை பட்டதாரிகள் எழுதினார்கள்.

சென்னை எஸ்.ஐ.டி. கல்லூரி, புது கல்லூரி, ஸ்டெல்லாமேரி கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, டாக்டர் எம்.ஜி.ஆர்.–ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டது.

காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை ஒரு தேர்வு, காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை 2–வது தேர்வு, பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை 3–வது தேர்வு என 3 தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த 3 தேர்விலும், அனைத்து கேள்விகளும் கொள்குறி வகையில் கேட்கப்பட்டிருந்தன. இதில், சோசியாலஜி, சோசியல் ஒர்க், சைக்காலஜி, மேனேஜ்மென்ட் உள்பட பல்வேறு பாடப்பரிவுகளை சேர்ந்த மாணவர்கள் எழுதினார்கள்.

சென்னை அயனாவரத்தை சேர்ந்த மிரண்டா தாம்கின்ஷன் என்ற 100 சதவீதம் பார்வை குறைபாடு உடைய சோசியாலஜி பாடப்பிரிவு மாணவர், கல்லூரி பேராசிரியருக்கான தேசிய அளவிலான தகுதி தேர்வில் தனக்கு ‘பிரெய்லி’ முறையில் கேள்வித் தாள் வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை ஐகோர்ட்டு அந்த மாணவருக்கு ‘பிரெய்லி’ முறையில் கேள்வித்தாள் வழங்குமாறு யு.ஜி.சி.–க்கு உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து, நேற்று நடைபெற்ற தேர்வில் அந்த மாணவருக்காக டெல்லியில் இருந்து அவருக்கு என ‘பிரெய்லி’ முறையில் பிரத்தேகமாக தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் வரவழைக்கப்பட்டு கொடுக்கப்பட்டது. மேலும் அவருக்கு விடைத்தாளை நிரப்புவதற்கு உதவியாளரும், கூடுதல் நேரமும் ஒதுக்கப்பட்டது.

சென்னை அடையாறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.–ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மிரண்டா தாம்கின்ஷன் தகுதித்தேர்வை எழுதினர் .
CLICK HERE FOR ALL STUDY MATERIALS

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||