வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கான இடமாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்விற்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கான இடமாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்விற்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது.அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கி வந்த நிதியை நிறுத்திக் கொண்டதைத் தொடர்ந்து, இத்திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாநில கல்வி திட்டத்திற்கு மாற்ற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

அதனையொட்டி வட்டார வளமைய மேற்பார்வையாளர்களை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.அதன்படி மாநிலம் முழுவதும் 280 வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் வழங்கவும், 248 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணி வழங்குவதற்கான கலந்தாய்வு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடந்தது.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||