அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்–1 மெயின் தேர்வு விடைத்தாள்கள் 2–வது முறையாக மதிப்பீடு செய்யும் பணி நடக்கிறது என்று அரசுப்பணியாளர் தேர்வாணைய அதிகாரி கூறினார்.

அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்–1 மெயின் தேர்வு விடைத்தாள்கள் 2–வது முறையாக மதிப்பீடு செய்யும் பணி நடக்கிறது என்று அரசுப்பணியாளர் தேர்வாணைய அதிகாரி கூறினார். தமிழ்நாட்டில் காலியாக உள்ள துணை கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் 25 இடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களைநிரப்ப அரசு முடிவு செய்து, 25 பேர்களை தேர்வு செய்வதற்கான பணியை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைத்தது. 

 இதையொட்டி 25 பேர்களை தேர்வு செய்ய குரூப்–1 முதல் நிலைத்தேர்வு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 16–ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 75 ஆயிரத்து 627 பேர் எழுதினார்கள். அவர்களில் 1372 பேர்களை அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்ந்து எடுத்தது. தேர்ச்சி பெற்ற 1372 பேர்களுக்கு மெயின் தேர்வு நடத்த அழைப்பு அனுப்பியது. அந்த தேர்வு கடந்த வருடம் அக்டோபர் மாதம் 25–ந்தேதி முதல் 27–ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும்தான் இந்த தேர்வு நடத்தப்பட்டது. திருவல்லிக்கேணி என்.கே.டி. மேல்நிலைப்பள்ளி, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட 14 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுத தகுதி உடையவர்களில் 84 சதவீதம் பேர் தேர்வு எழுத வந்தனர். 16 சதவீதத்தினர் வரவில்லை. 

 தேர்வு அறைகளில் பட்டதாரிகள் தேர்வு எழுதும்போது வீடியோ காட்சி எடுக்கப்பட்டது. தேர்வு முடிவு எப்போது வரும் என்று தேர்வு எழுதியவர்கள், அவர்களின் குடும்பத்தினர் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். எனவே முடிவு எப்போது வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:– பட்டதாரிகள் எழுதிய குரூப்–1 மெயின் தேர்வு விடைத்தாள்கள், சம்பந்தபட்ட பாடங்களில் நிபுணத்துவம் கொண்ட பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர்கள் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. தவறு எதுவும் நடந்துவிடாமல் இருக்க விடைத்தாள்களை 2 முறை மதிப்பீடு செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்திருந்தது. அதன்படி தற்போது 2–வது முறையாக விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
CLICK HERE FOR ALL STUDY MATERIALS

Comments