தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெறுவதை உறுதிப்படுத்தும் வகையிலும், ‘வெற்றி உங்கள் கையில்’ எனும் புதிய திட்டம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டடுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெறுவதை உறுதிப்படுத்தும் வகையிலும், ‘வெற்றி உங்கள் கையில்’  எனும் புதிய திட்டம்  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டடுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெறுவதை உறுதிப்படுத்தும் வகையிலும், ‘வெற்றி உங்கள் கையில்’  எனும் புதிய திட்டம்  சென்னை-92,  விருகம்பாக்கம், ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  மாண்புமிகு தமிழக  முதலமைச்சர்  அவர்களின்  வழிகாட்டுதலின் படி மாண்புமிகு பள்ளிக் கல்வித்  துறை அமைச்சர் அவர்களால்  31.12.2013 அன்று துவக்கி வைக்கப்பட்டது.  

இத்திட்டத்தின் மூலம்  அரசுப் பள்ளிகளில்  பொதுத் தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் பொதுத் தேர்வினை தன்னம்பிக்கையுடன் எளிதாக எதிர்கொள்வதற்கும், மாணாக்கர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும்,  வெவ்வேறு பள்ளிகளில் பணிபுரியும் அனுபவம்  மிக்க மற்றும் அனைத்துப் பாடங்களிலும் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களைக்  கொண்டு பயிற்சியும், வழிகாட்டுதலும் வழங்கப்பட வேண்டும்.  மேலும் முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்வு வினாத்தாட்களைக் கொண்டு தேர்வுகள் வைத்து மாணவர்களைத்  தேர்விற்குத் தயார்படுத்துதல், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் வெளியிடப்பட்டுள்ள மாதிரி வினா வங்கி கொண்டு பயிற்சி அளித்தல்,   மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்துதல்,  எளிதான பாடப்பகுதிகளை அடையாளம் கண்டு தயார் செய்யப்பட்ட குறைந்தபட்ச கற்றல் கையேடுகளைக் கொண்டு பயிற்சி அளித்தல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.  

மேலும், பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களுக்கு ஆலோசனை வழங்குதல்  இத்திட்டத்தின் கூடுதல் நோக்கமாகும்.  மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம் பொதுத் தேர்வினை அவர்கள் எவ்விதப் பயமுமின்றி எளிதாக எதிர்கொள்வதற்கான வாய்ப்புகளை இத்திட்டத்தின் மூலம் உருவாக்க இயலும்.
   
எனவே, 2013-14 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணாக்கர்களின் நல்ல மதிப்பெண்களைப் பெறவும் பள்ளிகளில் தேர்ச்சி விதிம் அதிகரிக்கச் செய்யவும்  மேற்படி ‘வெற்றி உங்கள் கையில்’ திட்டத்தை ஒவ்வொரு பள்ளியிலும் திறம்படச் செயல்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களால் தவறாமல் மேற்கொள்ளப்பட வேண்டும்.
CLICK HERE FOR ALL STUDY MATERIALS

Comments