அகில இந்திய கால்நடை மருத்துவ நுழைவு தேர்விற்கு பிப்ரவரி 12–ந் தேதி வரை விண்ணப்பம் சென்னையில் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளிலும் கால்நடை மருத்துவம் படிக்க மாணவர்சேர்க்கை வருடந்தோறும் நடந்து வருகிறது. மாநிலங்களில் உள்ள ஒதுக்கீடு 85 சதவீதம். 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடு ஆகும். அதன்படி 15 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ப்பதற்காக அகில இந்திய நுழைவு தேர்வு மே மாதம் 10–ந் தேதி நடைபெறுகிறது. அந்த தேர்வுக்கு விண்ணப்ப படிவங்கள் சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கம் சாலையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவக்குழுவில் கிடைக்கும். விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பம் பிப்ரவரி 12–ந் தேதி வரை விற்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிக்க பிப்ரவரி 18–ந் தேதி கடைசி நாள். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மாநில கால்நடை மருத்துவ கல்லூரிகளில் 15 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரலாம். 
CLICK HERE FOR STUDY MATERIALS

Comments