மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வு பிப்ரவரி 16–ந்தேதி நடக்கிறது

மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்களாக சேருவதற்கு மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வை சி.பி.எஸ்.இ. நிறுவனம் நடத்துகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16–ந்தேதி நாடு தழுவிய அளவில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் அதே தேதியில் தேர்வு நடத்தப்பட உள்ளது.

1–வது வகுப்பு முதல் 5–வது வகுப்புவரை பாடம் சொல்லிக்கொடுக்க தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்கள் தாள்–1 எழுதவேண்டும். 6–வது வகுப்பு முதல் 8–வது வகுப்புவரை பாடம் நடத்த தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்கள் தாள்–2 எழுதவேண்டும். இரு தாள்களும் எழுத விரும்புவோர் இரு தாள்களையும் எழுதலாம்.
CLICK HERE FOR ALL STUDY MATERIALS

Comments