எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை (ஜெனியூனஸ்) உறுதி செய்ய சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் வழியாக தொகுத்து அனுப்ப வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறித்தியுள்ளது.

அரசு தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- 
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை (ஜெனியூனஸ்) உறுதி செய்ய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும், உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகளும் தேர்வுத்துறை இயக்குநருக்கு நேரடியாக விண்ணப்பிக்கிறார்கள். இது அலுவலக நடைமுறைக்கு முரணானது ஆகும். 

சான்றிதழ்களின் உண்மைத் தன்மைக்கு விண்ணப்பிப்பதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் வழியாக தொகுத்து அனுப்ப வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 
CLICK HERE TO DOWNLOAD IT FORM
Comments