கணினித்தமிழ் விருதுக்கு 20–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக வழங்கப்பட உள்ள ‘முதல்–அமைச்சர் கணினித் தமிழ் விருது’–2013–ம் ஆண்டுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 31.12.2013 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது விருதுக்கு விண்ணப்பிக்கும் காலம் 20–ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம், விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித்துறையின் (www.tamilvalarchithurai.org) வலைத்தளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
CLICK HERE FOR ALL STUDY MATERIALS

Comments