பொது நூலகங்களுக்கு மாதிரி பிரதி நூல்களை அந்தந்த மாவட்ட நூலக ஆணைக்குழுவில் சமர்ப்பிப் பதற்கான கடைசி தேதி ஜனவரி 25-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்குநரும், பொதுநூலக இயக்கு நருமான (கூடுதல் பொறுப்பு) வி.சி.ராமேஸ்வர முருகன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:- பொது நூலக இயக்ககத்தின் கீழ் செயல்படும் நூலகங்களுக்கு நூலக நிதி மற்றும் ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை நிதி உதவியில் இருந்து 2012, 2013-ம் ஆண்டு பதிப்பு நூல்களை (தமிழ், ஆங்கிலம்) நூலகங்களுக்கு வாங்குவதற்கு மாதிரி பிரதி நூல்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜனவரி 20-ம் தேதி என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. பதிப்பகத்தார் மற்றும் புத்தக விற்பனையாளர்களின் வேண்டு கோளுக்கு இணங்க, மாதிரி பிரதி நூல்களை அந்தந்த மாவட்ட நூலக ஆணைக்குழுவில் சமர்ப்பிப் பதற்கான கடைசி தேதி ஜனவரி 25-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.  
CLICK HERE FOR STUDY MATERIALS

Comments