தற்காலிக மருத்துவர்களை பணிநிரந்தரம் செய்வதற்காக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தியது. அதில் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் நேர்முகத்தேர்வு 5-ந்தேதி முதல் 13-ந்தேதி வரைநடக்கிறது.

தற்காலிக மருத்துவர்களை பணிநிரந்தரம் செய்வதற்காக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தியது. அதில் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் நேர்முகத்தேர்வு 5-ந்தேதி முதல் 13-ந்தேதி வரைநடக்கிறது.

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக பணியாற்றி வரும் மருத்துவர்களை, நிரந்தர பணியில் ஈர்த்துக் கொள்ளும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 22.09.2013 அன்று சிறப்பு போட்டித் தேர்வை நடத்தியது.

அத்தேர்வின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டோர் பட்டியல் தேர்வாணைய இணைய தளத்தில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கான நேர்முகத்தேர்வும் அதற்கு முன் மூலச்சான்றுகள் சரிபார்ப்புப்பணியும் வருகிற 5-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டள்ளன.

எந்ததெந்த விண்ணப்பதாரருக்கு எந்த நாளில் மூலச்சான்று சரிபார்க்கப்படும் எந்த நாளில் நேர்முகத்தேர்வு நடத்தப்படும் போன்ற விவரங்கள் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் விரைவு தபால் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இணையதளத்தில் மின்னஞ்சல் மற்றும் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலமும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

அவ்விவரங்களைப் பார்த்து தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் மூலச்சான்று சரிபார்ப்பு பணிக்கும், நேர்முகத்தேர்வுக்கும் அவரவருக்கு அனுமதிக்கப்பட்ட நாளில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். அவரவர்க்கு அனுமதிக்கப்பட்ட நாளில் கலந்து கொள்ளத் தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கவியலாது என்றும் அறிவிக்கப்படுகிறது.

மூலச்சான்று சரிபார்ப்பு பணிக்கும் நேர்முகத் தேர்வுக்கும் ஒவ்வொருவருக்கும் அனுமதிக்கப்பட்டுள்ள நாள், நேரம் போன்ற விவரங்களடங்கிய அனுமதிக்குறிப்பாணை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
CLICK HERE FOR ALL STUDY MATERIALS

Comments