புதுக்கோட்டை மாவட்ட செய்தி : ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 நாட்கள் நடைபெற இருப்பதாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நா. அருள்முருகன் தகவல் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தி : ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி  பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 நாட்கள் நடைபெற இருப்பதாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நா. அருள்முருகன் தகவல் தெரிவித்துள்ளார். 


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2013-ம் ஆண்டில் பட்டதாரி ஆசிரியர்(தாள்2) மற்றும் இடைநிலை ஆசிரியர்(தாள்1) தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.  அத்தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற இருக்கிறது. 

தகுதித்தேர்வில்  தேர்ச்சி பெற்ற 677 நபர்களுக்கு 20-01-2014(திங்கட்கிழமை), 21-01-2014(செவ்வாய்கிழமை), 22-01-2014(புதன்கிழமை), 23-01-2014( வியாழக்கிழமை), மற்றும்  24-01-2014(வெள்ளிக்கிழமை) ஆகிய 5 நாட்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற உள்ளது. 

எனவே ஆசிரியர்தகுதித்தேர்வில்   தேர்ச்சிப்பெற்றவர்கள் அழைப்புக்கடிதம், ஆளறிச்சான்று மற்றும் உரிய ஆவணங்களை trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ளபடி அசல் மற்றும் சான்றொப்பமிட்ட நகல் சான்றிதழ்களுடன் மூன்று பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் அவரவர்க்கு அழைப்புக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தேதியில் காலை 9.30 மணிக்கு வருகை புரிந்திடவேண்டும். 

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்று அழைப்புக்கடிதம் பெற இயலாவிடில் உரிய ஆவணங்களுடன்  முதன்மைக்கல்வி அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 
CLICK HERE FOR STUDY MATERIALS

Comments