இன்று 7.1.2014 வேட்டிகள் தினம் : நறுமணம் வீசும் வேட்டி அறிமுகம் | 100 வகை வேட்டிகளுடன் அலங்கார அணிவகுப்பு | எழும்பூர் கோ–ஆப்டெக்ஸ்சில் இன்று நடைபெறுகிறது

தமிழ்நாட்டில் நாளை( 7.1.2014) வேட்டிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோ–ஆப் டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் சகாயம் செய்தியாளர்களிடம், ’’தமிழக அரசின் கோ–ஆப் டெக்ஸ் நிறுவனம் நாளை வேட்டி தினத்தை கொண்டாகிறது. இதையொட்டி கோ–ஆப்டெக்ஸ் ஊழியர்கள் அனைவரும் வேட்டி அணிந்து பணிக்கு வருவார்கள்.

வேட்டி தினத்தையொட்டி நாளை கோ–ஆப் டெக்ஸ் ஊழியர்கள் அனைவரும் வேட்டி அணிகிறார்கள். தலைமை அலுவலக திடலில் வேட்டி அலங்கார அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் இளைஞர்கள் மட்டுமின்றி பருத்தி விவசாயிகளும், நெசவாளர்களும் பங்கேற்று அணிவகுப்பார்கள்.

வேட்டி என்பது படிக்காதவர்கள், விவசாயிகளின் உடை என்ற தவறான எண்ணம் உருவாகி இருக்கிறது. ஆனால் வேட்டி தமிழர்களின் அடையாள சின்னம் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் முன்னிலை ப்படுத்துகிறோம்.

இளைஞர்கள் மட்டுமின்றி எல்லா வயதினரும் அணியும் வகையில் வேட்டிகளில் பல ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.வேட்டி தினத்தை கொண்டாடும் வகையில், நாட்டாமை வேட்டி, ஜமீன் வேட்டி, அய்யர் வேட்டி, தலைவர் வேட்டி, தொட்டில் வேட்டி, காந்தி வேட்டி, சாமியார் வேட்டி, எம்ப்ராய்டரி வேட்டி, வாசனை வேட்டி, கறைபடாத வேட்டி, மாப்பிள்ளை வேட்டி, இளவட்டம் வேட்டி, ஜரிகை வேட்டி உள்பட 100 வகையான வேட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இயற்கை சாயம் பூசப்பட்ட ‘ஆரோக்கியா’ வேட்டி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.மேலும் சரித்திரா சேலைகள், இலக்கியா படுக்கை விரிப்புகள், குட்டீஸ் படுக்கை விரிப்புகள், தேனிலவு படுக்கை விரிப்புகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதில் விஷேசமாக நறுமணம் வீசும் வாசனை வேட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது எல்லோரையும் கவரும். இந்த வேட்டியை சலவை செய்தாலும் 4, 5 மாதங்களுக்கு பிறகும் நறுமணம் வீசி கொண்டே இருக்கும். தற்போது 50 ஆயிரம் வேட்டிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

வேட்டி தினம் அறிவிக்கப்பட்ட பிறகு வேட்டிகள் விற்பனை அதிகரித்துள்ளது. பலரிடம் வேட்டி கட்டி ஆர்வம் மேலோக்கியுள்ளது. விரைவில் ஆரோக்கிய வேட்டி என்ற புது ரகத்தை அறிமுகம் செய்ய போகிறோம்’’ என்று தெரிவித்தார்.
CLICK HERE FOR ALL STUDY MATERIALS DOWNLOAD

Comments