குறைந்து வரும் நேரடி துணை ஆட்சியர் நியமனங்கள்...

குறைந்து வரும் நேரடி துணை ஆட்சியர் நியமனங்கள் தற்காலிக பணியிடங்களை நிரந்தரம் செய்யாததால் இளைஞர்களுக்கு பாதிப்பு 

காவல்துறை துணை கண் காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர் நேரடி நியமனங்கள் அதிகரித்து வரும் நிலையில், நேரடி துணை ஆட்சியர் நியமனம் குறைந்து வருவது இளைஞர் களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்காலிக துணை ஆட்சியர் பணியிடங்களை நிரந்தரம் செய்யாததே இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

குரூப்-1 தேர்வு மூலம் துணை ஆட்சியர் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சுமார் 10 ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும், அதேபோல், டி.எஸ்.பி. பணியில் சேருவோர் ஐ.பி.எஸ். அதிகாரியாகவும் பதவி உயர்வுபெறுகிறார்கள். அதோடு அவர்கள் தமிழ்நாட்டிலேயே பணியைத் தொடரலாம்.

 850 பணியிடங்கள் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட குருப்-1 தேர்வில் 33 டி.எஸ்.பி. பணியிடங்களும், 33 வணிகவரி உதவி ஆணையர் பணியிடங்களும் இடம்பெற்றுள்ள நிலையில், துணை ஆட்சியர் காலியிடங்கள் வெறும் 3 மட்டுமே. அதேபோல், இதற்கு முந்தைய 2012-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் துணை ஆட்சியர் பதவிக்கு 8 காலியிடங்கள்தான் அறிவிக்கப்பட்டன. துணை ஆட்சியர் பணி நியமனத்தைப் பொறுத்தவரை யில் 2:1 என்ற விகிதாச்சாரம் பின்பற்றப்படுகிறது. அதாவது மொத்தம் 3 காலியிடங்கள் என்றால், அதில் 2 இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் 1 இடம் குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாகவும் நிரப்பப்படும். தமிழகத்தில் துணை ஆட்சியர் பணியிடங்கள் 750 முதல் 850 வரை இருக்கும். வெள்ளம், இயற்கை சீற்றம், மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் போன்ற நிகழ்வுகளில் தற்காலிக அடிப்படையில் துணை ஆட்சியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். பின்னர் அந்த இடங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது விதிமுறை. சுமார் 150 துணை ஆட்சியர் பணியிடங்கள் நீண்ட காலமாக காலியாக கிடக்கின்றன. 65 தற்காலிக துணை ஆட்சியர் பணியிடங்களை பணி நிரந்தரம் செய்யும் வகையில் வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்திலிருந்து அரசுக்கு அனுப்பப்பட்ட கோப்பு மீது 2 ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. 

நேரடி துணை ஆட்சியர் நியமனங்கள் குறைந்து வருவதால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். தற்காலிக பணியிடங்களை பணி நிரந்தரம் செய்தால் துணை ஆட்சியர் நேரடி நியமன எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால், இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள். சுமார் 150 துணை ஆட்சியர் பணியிடங்கள் நீண்ட காலமாக காலியாக கிடக்கின்றன.
CLICK HERE FOR ALL STUDY MATERIALS DOWNLOAD

Comments