"அரசு ஊழியர்களின் மனைவியருக்கு, தங்கள் கணவர்களின் சம்பள விவரத்தை தெரிந்து கொள்வதற்கு உரிமை உள்ளது' என, மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

"அரசு ஊழியர்களின் மனைவியருக்கு, தங்கள் கணவர்களின் சம்பள விவரத்தை தெரிந்து கொள்வதற்கு உரிமை உள்ளது' என, மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு கூறியதாவது: அரசு ஊழியர்களின் மனைவியருக்கு, தங்கள் கணவர்களின் சம்பளம் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளும் உரிமை உள்ளது. குடும்பத்தை நடத்துபவர்கள் என்ற முறையில், தங்கள் கணவர்களின் சம்பளத்தை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம், மனைவியருக்கு உள்ளது. அரசு ஊழியர்கள் அல்லது அரசு அதிகாரிகளின் சம்பள விவரங்களை, மூன்றாவது நபர்களின் சொந்த விஷயமாக கருத முடியாது. அரசு ஊழியர்களின் சம்பளம் பற்றிய விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டால், சம்பந்தப்பட்ட அலுவலகங்கள், அதை தெரிவிக்க வேண்டும்.டில்லியில், இதுபோன்ற தகவல்களை, உள்துறை அமைச்சகம் தெரிவிப்பது இல்லை என, புகார்கள் வந்துள்ளன. உள்துறை அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரின் மனைவி, தன் கணவரின் சம்பள விவரத்தை கேட்டபோது, தகவல் தர மறுத்து உள்ளனர். இனிமேல், இது போல் மறுத்தால், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, ஸ்ரீதர் ஆச்சார்யலு கூறினார்.

Comments