மானிய விலை காஸ் சிலிண்டர் பெற ஆதார் அட்டையைக் கட்டாயமாகக் கேட்கும் நிலைமைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்துள்ளது.

மானிய விலை காஸ் சிலிண்டர் பெற ஆதார் அட்டையைக் கட்டாயமாகக் கேட்கும் நிலைமைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்துள்ளது. 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மானியத்துடன் கூடிய சமையல் காஸ் சிலிண்டர்களை விநியோகஸ்தர்களிடமிருந்து பெறுவதற்குக் கட்டாயமாக ஆதார் அட்டை கொடுத்து பதிவு செய்துகொள்ள வேண்டும் என விநியோகஸ்தர்கள் வற்புறுத்துகின்றனர்.

அரசு சலுகை பெற ஆதார் அட்டை கட்டாய மில்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்த பிறகும் அந்த உத்தரவை மதிக்காமல் இன்னமும் சமையல் காஸ் சிலிண்டர் விநியோகஸ்தர்கள் ஆதார் அட்டை பதிவு செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என அச்சுறுத்தி வருகின்றனர். 

இந்த போக்கு குறித்து பல்வேறு சேவை அமைப்புகள் சமையல் காஸ் தலைமை அலுவலகம், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் உள்ளிட்ட பலருக்கு கடிதம் எழுதியும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் சமையல் காஸ் சிலிண்டருக்கு ஆதார் அட்டை பதிவு கட்டாயம் என்கிற நிலை தொடர்ந்தது. 

இதனால் நீதிமன்றத்தின் உதவியை நாட முடிவு செய்தன சேவை அமைப்புகள். திருச்சியிலுள்ள சேவை சங்கங்களின் கூட்டமைப்பும், சிவகாசியில் இயங்கிவரும் ஒரு சேவை அமைப்பும் மதுரையிலுள்ள சென்னை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கு வியாழக்கிழமை நீதிபதி கள் சுதாகர், வேலுமணி ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மானிய விலை காஸ் சிலிண்டருக்காக அரசின் சலுகையைப் பெற ஆதார் அட்டையை கேட்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALSComments