இடைநிலை ஆசிரியர் பயிற்சித்தேர்வு முடிவுகள் இன்று திங்கட்கிழமை வெளியாகும் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

இடைநிலை ஆசிரியர் பயிற்சித்தேர்வு முடிவு இன்று திங்கட்கிழமை வெளியிடப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும், தனித்தேர்வர்கள் மற்றும் தக்கல் முறையில் தேர்வு எழுதியவர்கள் அனைவரும் விண்ணப்பங்கள் சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்களில் தேர்வு எழுதி சான்றிதழ் கிடைக்கப்பெறாத தேர்வர்களும் மற்றும் அகமதிப்பீட்டுத்தேர்வு மற்றும் கருத்தியல் தேர்விற்கான அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று, பட்டயச்சான்றிதழ் கிடைக்கப்பெறாத தேர்வர்களும் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற பாடங்களுக்கு பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அசல்களுடன் அரசுத்தேர்வுகள் இயக்ககத்தினை உடனடியாக அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க நாளை (திங்கட்கிழமை) முதல் 8–ந்தேதி வரை விண்ணப்பங்களை அனைத்து மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளலாம். www.tndge.in என்ற இணையதளம் மூலமும் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் வருகிற 9–ந்தேதி மாலை 5 மணிக்குள் உரிய இணைப்புகளுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். தபாலில் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிரா
கரிக்கப்படும்.இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.
CLICK HERE FOR ALL STUDY MATERIALS

Comments