பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கும் விண்ணப்பிக்கும் குரூப்-பி, குரூப்-சி., குரூப்-டி. அரசு ஊழியர்களுக்கு என்.ஓ.சி. வழங்கும் அதிகாரத்தை பணிநியமன அதிகாரிகளுக்கு அளித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போதும் சரி, அதை புதுப்பித்துக்கொள்வதற்கும் சரி தங்கள் துறைத்தலைவரிடம் தடையின்மை சான்று (என்.ஓ.சி.) வாங்க வேண்டும் என்ற விதி இருந்தது. இதனால், என்.ஓ.சி. பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், காலதாமதத்தை தவிர்க்கவும் ஊழியர்களுக்கு விரைவாக என்.ஓ.சி. வழங்கிடவும் தமிழக அரசு புதிய நடைமுறையைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி, பாஸ்போர்ட் வாங்கவும், ஏற்கெனவே இருக்கும் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கும் விண்ணப்பிக்கும் குரூப்-பி, குரூப்-சி., குரூப்-டி. அரசு ஊழியர்களுக்கு என்.ஓ.சி. வழங்கும் அதிகாரத்தை பணிநியமன அதிகாரிகளுக்கு அளித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை முதன்மைச் செயலாளர் பி.டபிள்யூ.சி. டேவிதார் வெளியிட்டுள்ளார்.  CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALSComments