CEO TRANSFER : 7 முதன்மை கல்வி அலுவலர்களை மாற்றம் செய்து பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடக்க கல்வித்துறை துணை இயக்குனர் புகழேந்தி( முதன்மை கல்வி அதிகாரி ரேங்க்) மாற்றப்பட்டு திருவண்ணாமலை அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதுவரை அந்த பணியில் இருந்து திருவண்ணாமலை கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி நூர்ஜகான் சென்னையில் உள்ள தொடக்க கல்வித்துறை துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பி.அருண்பிரசாத், தமிழ்நாடு தொடக்க கல்வி துணை இயக்குனராக மாற்றப்பட்டார்.

தொடக்க கல்வி துணை இயக்குனர் பொன்னையா, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தூத்துக்குடி கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி சரோஜா, கோவை மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக மாற்றப்பட்டார்.

கோவை கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி லத்திகா, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக மாற்றப்பட்டார்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் சுப்பிரமணியன் பள்ளிக்கல்வி மின் ஆளுமை துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார். சேலம் மாவட்ட கல்வி அதிகாரி ஆர்.மனோகரன் சென்னையில் உள்ள தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.
.......................

1. அருண் பிரசாத் - தொடக்கக் கல்வித் துறை துணை இயக்குநர் (மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், திருவண்ணாமலை)

2. பொன்னையா - திருவண்ணா மலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (துணை இயக்குநர், தொடக்கக் கல்வி)

3. புகழேந்தி - திருவண்ணாமலை மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.) கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (துணை இயக்குநர், தொடக்கக் கல்வி)

4. நூர்ஜஹான் - தொடக்கக் கல்வித் துறை துணை இயக்குநர் (கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ. திட்டம், திருவண்ணாமலை)

5. சரோஜா - கோவை எஸ்.எஸ்.ஏ. திட்ட கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ. திட்டம், தூத்துக்குடி)

6. லத்திகா - தூத்துக்குடி எஸ்.எஸ்.ஏ. திட்ட கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ. திட்டம், கோவை)

7. சுப்ரமணியம் - துணை இயக்குநர், மின் ஆளுமை, பள்ளிக் கல்வி இயக்ககம் (செயலாளர், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம்)

சேலம் மாவட்டக் கல்வி அதிகாரி ஆர்.மனோகரன் பதவி முதன்மைக் கல்வி அதிகாரியாக பதவி உயர்வுபெற்று தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS



Comments