தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான, பணி நியமன ஆணையை, பிப்., 12 ல் தமிழக முதல்வர் ஜெ., வழங்குகிறார்.

தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான, பணி நியமன ஆணையை, பிப்., 12 ல்  தமிழக முதல்வர் ஜெ., வழங்குகிறார். அன்றைய தினமே, அந்தந்த மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், 4 வார கால பயிற்சி துவங்குகிறது.

தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கு, 7,500 ரூபாய் சம்பளத்தில் 10,500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக, முதல்வர் ஜெ., அறிவித்தார். இதற்காக, விண்ணப்பித்தவர்களுக்கு, நவ., 10 ல் எழுத்து தேர்வு நடந்தது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, டிச., 30 ல் உடற்தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி, மருத்துவ பரிசோதனை நடந்தது. தேர்வு செய்யப்பட்டர்களுக்கான, பணி நியமன ஆணை, தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இவர்களில், 2 மாவட்டத்திற்கு ஒருவரை தேர்வு செய்து, அவர்களுக்கான பணி நியமன ஆணையை, சென்னை தலைமை செயலகத்தில், பிப்., 12 ல்,முதல்வர் ஜெ., வழங்க உள்ளார். அன்றைய தினமே, தேர்வான அனைவருக்கும், அந்தந்த மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், 4 வார கால பயிற்சி துவங்க உள்ளது. ரெகுலர் போலீசாருக்கு வழங்கப்பட்ட பயிற்சியை போல், இவர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS


Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

Comments