தமிழகச் சட்டப்பேரவையில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 13-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 13-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டிலும் அடுத்த நிதியாண்டுக்கான அரசின் வரவு-செலவு தொடர்பான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதில் புதிய அறிவிப்புகளும், வரிகள் தொடர்பான முடிவுகளும் வெளியாகும். இந்த நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்வார். 

கடந்த ஆண்டில் நிதிநிலை அறிக்கை மார்ச் 21-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நாடு முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த நிலையிலும், வரியில்லாத பட்ஜெட்டாகவும், உபரி பட்ஜெட்டாகவும் அது அமைந்தது. அந்தக் கூட்டத் தொடர், மே 16-ம் தேதி வரை மொத்தம் 41 நாட்கள் நடைபெற்றது. அதில், முதல்வர் ஜெயலலிதா நூற்றுக்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளி யிட்டார்.

அதிமுக அரசு பொறுப்பேற்று தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக வரிகள் இல்லாத பட்ஜெட்டைத் தாக்கல் செய்து வருகிறது. 

கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், விவசாயம் மற்றும் கட்டமைப்புத் துறைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கப்பட்டது. அதே சமயத்தில் கவர்ச்சிகரமான, பெரிய அளவிலான அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. 

மின்துறைக்கு அதிக நிதி ஒதுக்கியதாலும், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள் குறைந்ததாலும், உபரி (பட்ஜெட்) தொகை மட்டும் எதிர்பார்த்ததை விட (ரூ.2728 கோடி) 5 மடங்கு குறைந்தது (ரூ.451 கோடி). 

இந்நிலையில், தமிழகச் சட்டப் பேரவையின் கூட்டத்தொடரை வரும் 13-ம் தேதி பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார். அன்றைய தினம் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் வழக்கத்தை விட ஒரு மாதம் முன்னதாகவே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தலைக் கருத்தில் கொண்டு வரிகள் இல்லாத, அதே சமயம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளைக் கொண்ட பட்ஜெட்டாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் மீதான விவாதமும், மானியக் கோரிக்கைகளும் இம்மாதத்துடன் முடியுமா அல்லது நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும் தொடருமா என்பது பற்றி வரும் 13-ம் தேதி கூடும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். 

வழக்கமாக, மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகே, மாநில அரசுகள் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வது வழக்கம். ஆனால் இம்முறை, மத்திய அரசை முந்திக்கொண்டு தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மார்ச் 20-க்குப் பிறகு தாக்கல் செய்யப்படவிருந்த பட்ஜெட், முதல்வர் பிறந்த நாள் வருவதையொட்டி, சற்று முன்னதாகவே தாக்கல் செய்யப் படுவதாகவும் சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் பட்ஜெட்டுக்கு பிறகு, தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த அக்டோபர் மாதம் 23 ம் தேதி தொடங்கி 6 நாட்கள் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஜனவரி 30-ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 3-ம் தேதி வரை நடந்தது.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

Comments