ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்ட பின், மீண்டும் ஒரு முறை தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். தங்கள் தேர்வு பதிவு எண்ணை தவற விட்ட தேர்வர்கள் தங்கள் விண்ணப்ப எண்களை பதிவு செய்து, தேர்வு பதிவு எண் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப்பின்,மீண்டும் ஒரு முறை மதிப்பெண் விவரம், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த 3ம் தேதி, டி.இ.டி., தேர்வில், 5 சதவீத மதிப்பெண் சலுகை அளித்து, முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்வர் பெற்ற மதிப்பெண் விவரங்களை, மீண்டும், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட்டது. முதல்வர் அறிவிப்பின்படி, 55 சதவீத மதிப்பெண் (150க்கு 82) எடுத்து, தேர்ச்சி பெற்றதை, இணையதளத்தில் பார்த்து, உறுதி செய்து கொள்ளலாம். மேலும், பல தேர்வர்கள், தங்கள் தேர்வு பதிவு எண்ணை தவறவிட்டு விட்டதாகவும், இதனால், மதிப்பெண் விவரத்தை அறிய முடியவில்லை என்றும், டி.ஆர்.பி.,யிடம் தெரிவித்தனர். இப்படிப்பட்ட தேர்வர்கள், தங்கள் விண்ணப்ப எண்களை பதிவு செய்தால், தேர்வு பதிவு எண் விவரங்களை அறிந்து கொள்ளலாம். முதல்வர் அளித்த சலுகையினால், தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை, 40 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரம், தெரிவித்தது. இவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்துவது குறித்து, அதிகாரிகள், தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

Comments