தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 9-2-2014 ஞாயிறு அன்று நடைபெற்றது.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 9-2-2014 ஞாயிறு அன்று நடைபெற்றது.

 பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டும் .

01.06.2006க்கு முன்னர் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தையும் பணிக்காலமாக அறிவித்திட வேண்டும் .

 தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தற்போது பள்ளிக் கல்வித்துறையில் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திலிருந்து 50 சதவிகிதத்தை பதவி உயர்வு மூலம் வழங்கிட வேண்டும் .

 இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தினை வழங்க வேண்டும் .

 பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் .

 ஆசிரியர் தகுதித்தேர்வினை முற்றிலுமாக ரத்து செய்திட வேண்டும் .

போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 9-2-2014 ஞாயிறு அன்று நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் கு. தியாகராஜன் அவர்கள் தலைமையேற்றார். மாநிலச் செயலாளர் ஏ.ரமேஷ் அவர்கள் வரவேற்புரையாற்றினார். பா.உதயகுமார், மாநில பொருளாளர், டி.அருள்குமார் தலைமை நிலைய செயலாளர், க. அகிலா, மாநில மகளிரணி அமைப்பாளர், ஜி.தாமோதரன், மாநில அமைப்புச் செயலாளர், ஏ. மணிகண்டன், மாநில ஒருங்கிணைப்பாளர் போன்றோர் முன்னிலை வகித்தனர். எம். சிதம்பரஹரி, ஆலோசகர் தலைவர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், க. மீனாட்சி சுந்தரம், பொதுச்செயலாளர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், வ.அண்ணாமலை, அகில இந்திய செயலாளர், அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு, புலவர் ஆ. ஆறுமுகம், மாநில தலைவர், தமிழக தமிழாசிரியர் கழகம், எம்.நடராஜன், மாநில பொருளாளர், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை தலைமையாசிரியர் சங்கம், இரா. தாஸ், பொதுச்செயலாளர், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சா. மோசஸ், மாநில பொருளாளர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கா.சி. இளம்பரிதி, பொதுச்செயலாளர், தமிழக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் சங்கம், டி.ஆர்.ஜான் வெஸ்லி, பொதுச்செயலாளர், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம், மு. இராஜேஷ் குமார், மாநிலத் தலைவர், தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை பணியாளர் கழகம், கி&டி போன்ற தோழமை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர். இதில் தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்து சுமார் 2500 மேற்பட்ட ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டனர். இந்தக் கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் ஆசிரியர் நலன் கருதி நிறைவேற்றித்தரும் என்று நம்புவதாகவும், நிறைவேற்றாதபட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில செயற்குழுவைக் கூட்டி விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் தெரிவித்தார்.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

Comments