அரசு அதிகாரிகளின் ஊதிய நிர்ணயத்தில் உள்ள குறைபாடுகள் பற்றி ஆராய சட்டீஸ்கர் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (ஓய்வு) ஏ.எஸ்.வெங்கடாசலமூர்த்தி தலைமையில் ஒரு குழுவை அமைக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு அதிகாரிகளின் ஊதிய நிர்ணயத்தில் உள்ள குறைபாடுகள் பற்றி ஆராய சட்டீஸ்கர் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (ஓய்வு) ஏ.எஸ்.வெங்கடாசலமூர்த்தி தலைமையில் ஒரு குழுவை அமைக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் கடந்த 2009-ம் ஆண்டில் மாற்றி அமைக்கப்பட்டது. 

இதில் உள்ள குறைபாடுகள் பற்றி ஆராய ஒரு நபர் குழுவை அரசு அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரைகளைத் தொடர்ந்து உதவிப் பொறியாளர்கள் நிலையில் பணியாற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளின் ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. 

அதன் தொடர்ச்சியாக அதே நிலையில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் தங்களது ஊதியத்தையும் உயர்த்த வேண்டும் என்று கோரினர். பல்வேறு துறைகளிலிருந்து இதுபோல் தொடர்ச்சியாக கோரிக்கைகள் வரத் தொடங்கியதை அடுத்து, ஒரு நபர் குழுவின் பரிந்துரைப்படி ஊதிய மாற்றம் செய்தது சரிதானா என்பது பற்றி ஆராய ஊதிய குறைபாடுகளையும் குழுவை அரசு அமைத்தது. 

அதனைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளில் 52 நிலைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஏற்கெனவே உயர்த்தி வழங்கிய ஊதியத்தை அரசு திரும்பப் பெற்றது. அரசின் இந்த முடிவை எதிர்த்து தாக்கலான மனுக்களை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பலர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். 

அந்த மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், பி.தேவதாஸ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு: அரசு அதிகாரிகள் ஊதிய நிர்ணய குறைபாடுகள் பற்றிய ஆராய தமிழக அரசு மூன்று வாரங்களுக்குள் ஒரு குழுவை அமைக்க வேண்டும். சட்டீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.வெங்கடாசலமூர்த்தியை குழுவின் தலைவராக நியமிக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அந்தக் குழுவின் உறுப்பினர்களாக அரசு நியமிக்கலாம். 20-க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த 52-க்கும் மேற்பட்ட நிலைகளில் பணியாற்றும் அதிகாரிகளின் ஊதியத்தை உயர்த்துவது அல்லது குறைப்பது தொடர்பான பரிந்துரைகளை குழு அளிக்க வேண்டும். அந்தக் குழுவினருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தர வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

ONLINE BOOK SHOP FOR TRB-TET-TNPSC OTHER MATERIALS.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

Comments