இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறு வதற்கான கலந்தாய்வு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறு வதற்கான கலந்தாய்வு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. 

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: 

2013-14ம் கல்வி ஆண்டில் இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரிய ராக பதவி உயர்வுபெற தகுதி வாய்ந்தோர் முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்குவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் 22-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு நடத்தப்பட உள்ளது. 
தமிழ்-179, ஆங்கிலம்-82, கணிதம்-87, அறி வியல்-65, சமூக அறிவியல்-85 (மொத்தம் 498 பேர்). 

மேலும் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடியாக நியமனம் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வர்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான ஆன்லைன் கலந்தாய்வும் முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண் அடிப்படையில் நடக்கும். 

தமிழ்-16, ஆங்கிலம்-74, கணிதம்-27, அறிவியல்-14, சமூக அறிவியல்-21 (மொத்தம் 152 பேர்). 

பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், மாவட்ட தலைமையிடங்களில் அமைந்துள்ள ஏதேனும் ஒரு முதன்மைக் கல்வி அலுவல கத்துக்கு சென்று, தங்களுடைய ஆசிரியர் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்), கல்விச்சான்றிதழ் மற்றும் இதர சான்றி தழ்களுடன் கலந்தாய்வில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இதற்கிடையே, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 593 முதுகலை தமிழாசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கான கலந் தாய்வு, மாவட்ட முதன்மைக் கல்வி அதி காரி அலுவலங்களில் வெள்ளிக்கிழமை நடந்தது. அனைவருக்கும் ஆன்லைனில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அவர்கள் உடனடியாக பணியில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.தமிழ் 179
ஆங்கிலம் 82
கணிதம் 87
அறிவியல் 65
சமூக அறிவியல் 85
பதவி உயர்வு வழங்கப்படுவோர் எண்ணிக்கை மொத்தம் 498


CLICK HERE TO DOWNLOAD

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||