கல்விச்சோலையின் வாழ்த்துக்கள் | 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு | 11,552 பள்ளிகள் | 10,38,876 மாணவ-மாணவிகள் | 5,30,462 மாணவர்கள் | 5,08,414 மாணவிகள் | 5 ஆயிரம் பறக்கும் படைகள் | தேர்வு துவக்கம் காலை 9.15 மணி | தேர்வு நாட்கள் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை | தேர்வரின் புகைப்படம், பதிவு எண், பாடம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிட்ட முகப்பு சீட்டுடன் விடைத்தாள் | விடைத்தாள் பக்கங்கள் 30 | தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள்,பெற்றோர்கள், தேர்வை எதிர்கொள்ளும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்..

கல்விச்சோலையின் வாழ்த்துக்கள் | 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு |  11,552 பள்ளிகள் | 10,38,876 மாணவ-மாணவிகள் |  5,30,462 மாணவர்கள் |  5,08,414 மாணவிகள் | 5 ஆயிரம் பறக்கும் படைகள் | தேர்வு துவக்கம்  காலை 9.15 மணி | தேர்வு நாட்கள் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை |  தேர்வரின் புகைப்படம், பதிவு எண், பாடம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிட்ட முகப்பு சீட்டுடன் விடைத்தாள் | விடைத்தாள் பக்கங்கள் 30  |  தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள்,பெற்றோர்கள், தேர்வை எதிர்கொள்ளும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்..

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு 26-ம் தேதி (புதன்கிழமை) தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு தொடங்கும் நேரம் 45 நிமிடம் முன்னதாக அதாவது காலை 9.15 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தேர்வு அறையில் மாணவ-மாணவிகள் மனஇறுக்கத்தைப் போக்கி விடைகளை திட்டமிட்டு நல்ல முறையில் எழுத வசதியாக அதை முழுமையாக படித்துப் பார்க்க 10 நிமிடம் (9.15 மணி முதல் 9.25 மணி வரை) வழங்கப்படும்.

விடைத்தாளுடன் இணைக்கப்பட்ட முகப்பு படிவத்தில் அச்சிடப்பட்ட தேர்வர்களின் புகைப்படம், பதிவு எண் விவரங்களை சரிபார்த்துக்கொள்ள 5 நிமிடம் (9.25 மணி முதல் 9.30 மணி வரை) அளிக்கப்படும். விடைத்தாள் வழங்கிய பின்னர், விடைத்தாளில் பூர்த்தி செய்ய வேண்டிய தேர்வரின் பதிவுஎண் உள்ளிட்ட விவரங்களை பதற்றத்தின் காரண மாக தேர்வர்கள் தவறாக பதிவு செய்வதால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தேர்வரின் புகைப்படம், பதிவு எண், பாடம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிட்ட முகப்பு சீட்டு விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படுகிறது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்து கையெழுத்திட்டால் போதும். விடைத்தாள் பக்கங்கள் அதிகரிப்பு முதன்மை விடைத்தாளில் பக்கங் களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது. இதனால், தேர்வர்கள் கூடுதல் விடைத்தாள்கள் பெறுவதில் ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்படும். 10,38,876 மாணவர்கள் பங்கேற்பு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11,552 பள்ளி களைச் சேர்ந்த 10,38,876 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 5,30,462. மாணவிகள் 5,08,414 பேர். ஜெனரேட்டர் வசதி தேர்வில், கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா), பார்வையற்றோர், காது கேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் இதர உடல் ஊனமுற்றோருக்கான சொல் வதை எழுதுபவர், ஒரு மொழிப்பாடம் தவிர்ப்பு மற்றும் கூடுதல் ஒரு மணி நேரம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன. தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. எனினும், ஜெனரேட்டர் வசதி செய்துகொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யவும் தேர்வு மைய பொறுப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 தேர்வு மையங்களில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் 5 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக் கப்பட்டுள்ளன. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு ஏற்பாடுகள் குறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் சனிக்கிழமை கூறியிருப்பதாவது: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. மாவட்டங் களில் ஆட்சியர் தலைமையில் எஸ்.பி., டி.ஆர்.ஓ., சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் அடங்கிய கண்காணிப்புக் குழு அமைக்கப் பட்டுள்ளது. அவர்கள் தேர்வு மையங் களில் திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள்.

தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர், அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்.எஸ்.ஏ.) இயக்குநர், அரசு துணைச் செயலாளர், கல்வித்துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் தினமும் கண்காணிப்பு குழுக்களுடன் தேர்வு மையங்களுக்கு சென்று ஆய்வு செய்வர். தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வறையில் பிட் வைத்திருத்தல், அதைப் பார்த்து எழுத முயற்சித்தல், பக்கத்து மாணவரைப் பார்த்து பிட் அடித்தல், தேர்வு அதிகாரிகளிடம் முறை கேடாக நடந்துகொள்வது, தேர்வுத் தாள் மாற்றம், ஆள்மாறாட்டம் போன் றவை கடும் குற்றங்களாக கருதப் படும். இத்தகைய செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி தேர்வு மையம் ரத்துசெய்யப்படுவதுடன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு தொடங்கும் நேரம் 45 நிமிடம் முன்னதாக அதாவது காலை 9.15 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விடைகளை திட்டமிட்டு எழுத வசதியாக அதை முழுமையாக படித்துப் பார்க்க 10 நிமிடம் வழங்கப்படும்.

10ம் வகுப்பு தேர்வு அட்டவணை:
மார்ச் 26ம் தேதி தமிழ் முதல் தாள்
மார்ச் 27ம் தேதி தமிழ் இரண்டாம் தாள்
ஏப்ரல் 1ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 2ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 4ம் தேதி கணிதம்
ஏப்ரல் 7ம் தேதி அறிவியல்
ஏப்ரல் 9ம் தேதி சமூக அறிவியல்

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

ONLINE BOOK SHOP FOR TRB TET TNPSC BOOKS.

SSLC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

PLUS TWO STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TET STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TRB STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TNPSC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

Comments