12-ம் வகுப்பு உயிரியல் வினாத்தாளில் பிழைகள்:முழு மதிப்பெண் வழங்க கோரிக்கை

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு உயிரியல் வினாத்தாளில், பிழையாக கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கு, முழு மதிப்பெண் வழங்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. 20.03.2013வியாழக்கிழமை நடைபெற்ற உயிரியல் தேர்வில், ஒரு மதிப்பெண் வினா நான்கிலும், மூன்று மதிப்பெண் வினா ஒன்றிலும், பத்து மதிப்பெண் வினா ஒன்றிலும் பிழை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் குழப்பத்துக்குள்ளாகி தேர்வை எழுதியிருப்பதால், நன்கு படிக்கும் மாணவர்கள்கூட நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற முடியாத நிலை உள்ளதாக மாணவர்களும் பெற்றோரும் கவலை தெரிவிக்கின்றனர். எனவே பிழையாக இருந்த வினாக்களுக்கு முழு மதிப்பெண் வழங்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
courtesy : http://www.puthiyathalaimurai.tv/


மாணவர்களை குழப்பிய கேள்விகள் 

தமிழில் தவறான மொழி பெயர்ப்பு enzyme என்பதை நொதி  என்று மொழி பெயர்ப்பு செய்திருக்க வேண்டும் . 
கோலி /கோலை என்பதற்கு பதிலாக கோவை என அச்சாகி உள்ளது.

தினமும் என்பதற்கு இணையான per day என்ற சொல் ஆங்கில வடிவத்தில் இல்லை .
சுற்று சூழல் தாக்கத்திற்கு இணையான  environmental impact என்ற சொல் ஆங்கில வடிவத்தில் இல்லை .
Fresh water management என்ற ஒரு கேள்வியும் reasons for fresh water crisis  என்ற ஒரு கேள்வியும் புத்தகத்தில் உள்ளது. இதற்கு எந்த பதிலை எழுதுவது என்பதில் குழப்பம்.
தலைமுறைக்கு தலைமுறை என்பதற்கு  இணையான  from generation to generation என்ற சொல் ஆங்கில வடிவத்தில் இல்லை மற்றும் Lamark & Mc Dougall இருவரும் இதில் சம்மந்தப்பட்டவர்கள் .
 inhibitin என்பது தான் ஹார்மோன்.  inhibition என்று வேறு பொருள் தரும் சொல் தவறாக தரப்பட்டுள்ளது.

போன்ற தவறுகள் மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் பாட ஆசிரியர்களால் சுட்டி காட்டப்பட்டுள்ளன.எனவே பிழையாக இருந்த வினாக்களுக்கு முழு மதிப்பெண் வழங்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

ONLINE BOOK SHOP FOR TRB-TET-TNPSC OTHER MATERIALS.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

Comments