பள்ளிகளில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு கல்வித்தகுதியை ஆன்லைனில் பதிவு செய்யும்போது ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க இந்த ஆண்டு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

பள்ளிகளில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு கல்வித்தகுதியை ஆன்லைனில் பதிவு செய்யும்போது ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க இந்த ஆண்டு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

10-ம் வகுப்பு, பிளஸ்-2 முடிக்கும் மாணவர்கள் வேலை வாய்ப்பு பதிவுக்காக முன்பு அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று பதிவுசெய்து வந்தனர்.

மாவட்ட தலைமையகத்தில் இருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று பதிவுசெய்வதால் மாணவர்களுக்கு அலைச்சல் ஏற்பட்டதுடன் பல்வேறு சிரமங்களையும் அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது. இந்த நிலையில், நீண்ட தூரம் பயணம் செய்வதால் ஏற்படும் அலைச்சலை தவிர்க்கவும், வேலை வாய்ப்பு அலுவலக பதிவை எளிதாக்கவும் பள்ளியிலேயே ஆன்லைனில் பதிவுசெய்யும் திட்டம் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆன்லைனில் பதிவுசெய்வது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். பதிவு செய்வதற்கான உபயோகிப்பாளர் அடையாளம் (யூசர் ஐ.டி.), ரகசிய எண் (பாஸ்வேர்டு) ஆகியவற்றையும் வழங்கி விடுவார்கள். பள்ளி ஊழியர்களே பதிவுப் பணியை செய்துவிடுவர்.

10-ம் வகுப்பு, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியிலேயே கல்வித்தகுதி ஆன்லைனில் பதிவு செய்யப்படும். மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, முகவரி, சாதி விவரம், ரேஷன் அடையாள அட்டை விவரங்கள், மதிப்பெண் சான்றிதழ் எண் ஆகிய விவரங் களை பதிவுசெய்து கையோடு வேலைவாய்ப்பு பதிவு அட்டையும் கொடுக்கப்பட்டுவிடும்.

வெவ்வேறு நாட்களில் பதிவு செய்ய நேர்ந்தாலும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாள் பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் தொடர்பான விவரங்களை ஒவ்வொன்றாக ஆன் லைனில் பதிவேற்றம் செய்வதால் கால தாமதம் ஆவதால் ஆன்லைன் பதிவை விரைவுபடுத்த புதிய நடை முறையை இந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை முஅறிமுகப்படுத்துகிறது. அதன்படி, மாணவர்கள் பெயர், பிறந்த தேதி, இருப்பிட முகவரி, ரேஷன் அடையாள அட்டை விவரம் உள்பட அனைத்து தகவல் களையும் மாணவர்களிடம் முன்கூட்டியே பெற்று கணினியில் பதிவுசெய்யப்படும்.

மதிப்பெண் சான்றிதழ் தொடர்பான விவரங்கள் மட்டும் சான்றிதழ் வழங்கப்படும் நாளன்று பதிவுசெய்யப்படும். இதன்மூலம், இதுவரை இருந்து வந்ததைப் போன்று அனைத்து விவரங்களையும் ஒரே நேரத்தில் பதிவுசெய்யத் தேவையில்லை.

சான்றிதழ் விவரம் நீங்கலாக மற்ற தகவல்கள் அனைத்தும் முன்கூட்டியே டேட்டா என்ட்ரி செய்யப்பட்டு விடுவதால் ஆன்லைன் பதிவை விரைவாக முடித்து அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாளில் பதிவு அட்டையை வழங்கிவிட முடியும். இதற்காக, 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை மே 2-ம் தேதிக்குள் சேகரிக்குமாறு அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்றகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

ONLINE BOOK SHOP FOR TRB TET TNPSC BOOKS.

SSLC STUDY MATERIALS

SSLC QUESTION PAPERS AND KEY ANSWERS.

PLUS TWO STUDY MATERIALS

PLUS TWO QUESTION PAPERS AND KEY ANSWERS.

TET STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TRB STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TNPSC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.


No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||