Posts

SSLC / PLUS TWO HALF YEARLY EXAM TIME TABLE DOWNLOAD | எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு காலஅட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார். அதன்படி பிளஸ்-2 தேர்வு டிசம்பர் 10 அன்று தொடங்கி டிசம்பர் 23 -ல் நிறைவடைகிறது. எஸ்எஸ்எல்சி தேர்வு டிசம்பர் 12 அன்று தொடங்கி டிசம்பர் 23-ல் நிறைவடைகிறது.

PGT, HIGH HM TO HR SEC HM PROMOTION | 2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளுக்கும், ஏற்கனவே காலியாக இருக்கும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 30-ந்தேதி காலை 10 மணி முதல் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.

HIGH HM TRANSFER | 2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கும் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 31-ந்தேதி காலை 10 மணி முதல் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.

BT TO PGT PROMOTION | 2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 450 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 31-ந்தேதி காலை 10 மணி முதல் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு 27.10.2014 திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது. மதிப்பெண் சான்றிதழை தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள், வருகிற 29-ம் தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசுத் தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய தவறியவர்களுக்கு மாற்று ஏற்பாடு.

மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட கல்விச் சான்றிதழ்களில் மாணவர்களின் சாதி மற்றும் இடஒதுக்கீடு தொடர பான விவரங்களை குறிப்பிடுவதற்கு சிபிஎஸ்இ தடை விதித்துள்ளது.