மத்திய அரசு ஊழியர்களின் வருகை பதிவு இனையதளத்தில் நேரடியாக அனைத்து மக்களும் பார்க்கலாம்.

மத்திய அரசு துறைகளில், துறை வாரியாக, அலுவலகம் வாரியாக ஒவ்வொரு ஊழியரும் எத்தனை மணிக்கு வருகிறார்கள், எத்தனை மணிக்கு செல்கிறார்கள், அவர்களின் இணைய முகவரி உட்பட அனைத்து விசயங்களும் இடம் பெற்றுள்ளன. அனைத்து ஊழியர்களுக்கும் பயோ மெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்யப்பட்டு இணையத்தில் நேரடியாக வருகிறது. இது அரசாங்கம் வெளிப்படையான அனுகுமுறையை கையாளவும், அனைத்து அரசு ஊழியர்களும் சரியான நேரத்திற்கு வருவதை உறுதி செய்யவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. யார் வேண்டுமானாலும் இந்த தகவல்களை பார்க்கலாம் என்பது தான் இதன் சிறப்பம்சம்.