மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா | டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் அதன் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் கொடியேற்றி வைத்தார். செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.சோபனா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா | டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் அதன் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் கொடியேற்றி வைத்தார். செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.சோபனா ஆகியோர் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எ.சுந்தரவல்லி தேசியக் கொடி ஏற்றினார். விழாவில் ரூ.8.90 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடந்த விழாவில் மேயர் சைதை துரைசாமி தேசியக் கொடி ஏற்றினார். மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்லவன் இல்லத்தில் நடந்த விழாவில் அதன் மேலாண் இயக்குநர் தே.ஆல்பர்ட் தினகரன் கலந்துகொண்டார். எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்திய 45 ஓட்டுநர்களுக்கும், அதிகபட்ச சராசரி வசூல் தொகை ஈட்டிய 27 நடத்துநர்களுக்கும் பரிசுகளை வழங்கினார். பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் விளையாட்டு மைதானத்தில் நடந்த விழாவில் ஐசிஎஃப் பொது மேலாளர் அசோக் கே.அகர்வால் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சென்னை துறைமுகத்தில் துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தலைமை அலுவலகத்தில் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் பி.சந்திரமோகன், வருமான வரி அலுவலகத்தில் தலைமை ஆணையர் ஜெயசங்கர், எல்ஐசி அலுவலகத்தில் மண்டல மேலாளர் டி.சித்தார்த்தன், தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆணையர் ம.ரா.மோகன் ஆகியோர் தேசியக் கொடி ஏற்றினர். டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் அதன் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் கொடியேற்றி வைத்தார். செய லாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.சோபனா ஆகியோர் கலந்துகொண் டனர்.

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||